Tuesday, December 28, 2010

எல்.ஐ.சி உழைக்கும் மகளிர் ஐந்தாவது தமிழ் மாநில மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்பு

30 ஜனவரி 2011  அன்று வேலூரில் நடைபெறவுள்ள எல்.ஐ.சி  உழைக்கும்  மகளிர் ஐந்தாவது தமிழ் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான வரவேற்புக்குழு   இன்று அமைக்கப்பட்டது.

வேலூர் கோட்டத் துணைப் பொருளாளர் தோழர் எம்.ஏ மங்கள கௌரிசெல்வி தலைமை  ஏற்க துணைக்குழு இணை அமைப்பாளர் தோழர் பரமேஸ்வரி வரவேற்புரை வழங்கினார்.  மாநாட்டின் நோக்கம் குறித்து தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் என்.ஆனந்தசெல்வி விளக்கினார். வேலூர் கோட்டப் பொதுச்செயலாளர் தோழர் எஸ்.ராமன், வரவேற்புக்குழுவை முன்மொழிந்து  பேசினார்.  சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலச்செயலாளர் தோழர் ஆண்டாள், அனைத்திந்திய   ஜனநாயக மாதர் சங்க மாவட்டத்தலைவர் தோழர் வளர்மதி
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன் இறுதியாக
சிறப்புரையாற்றினார். காட்பாடி கிளைச்செயலாளர் தோழர் எஸ்.பானுமதி
நன்றி தெரிவிக்க கூட்டம் இனிதே முடிந்தது.  கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய   குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் தோழர் ஜி.லதா அவர்கள், அவசரப் பணி காரணமாக வாணியம்பாடி செல்ல வேண்டியிருந்ததால் அவரால் வர இயலவில்லை. மாநாட்டு வெற்றிக்கு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும்  செய்வதாக உறுதியளித்துள்ளார்.

தோழர் ஜி.லதா அவர்களை தலைவராகவும். தோழர் பிளாரன்ஸ் லிடியா அவர்களை செயலாளராகவும் தோழர் எம்.ஏ மங்கள கௌரிசெல்வி அவர்களை பொருளாளராகவும்  கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.

அகில இந்தியத் தலைவர் தோழர் அமானுல்லாகான் அல்லது பொதுச்செயலாளர்  தோழர் கே.வேணுகோபால் இந்த  இருவரில் ஒருவர் மாநாட்டில்  பங்கேற்பார் என தோழர் சுவாமிநாதன் தகவல்  தெரிவித்துள்ளார்.  மாநாட்டை சிறப்பாக நடத்துவது,  வேலூர் கோட்ட பங்கேற்பை 100 %   உறுதிப்படுத்துவது  என்ற  இலக்கோடு செயல்படுவோம்.  வெற்றி காண்போம்.















Monday, December 27, 2010

அதிகரிக்கும் தற்கொலைகள்


மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான
தேசிய  குற்ற ஆவண ஆணையம் வெளியிட்டுள்ள  அதிகார பூர்வ
தகவல்படி  விவசாயிகளின் தற்கொலை என்பது கடந்தாண்டிலும்
அதிகரித்துள்ளது.  ஒரு புறத்தில் விலைகள் கடுமையாக உயர்ந்து
கொண்டிருக்க, விவசாயியோ தற்கொலை செய்து கொள்கிறான்.
எங்கே போகிறது பணம்?  

ஹிண்டு நாளிதழில் இன்று வெளியான கட்டுரை கீழே


Worst figure in six years
At least 17,368 Indian farmers killed themselves in 2009, the worst figure for farm suicides in six years, according to data of the National Crime Records Bureau (NCRB). This is an increase of 1,172 over the 2008 count of 16,196. It brings the total farm suicides since 1997 to 2,16,500. The share of the Big 5 States, or ‘suicide belt' — Maharashtra, Karnataka, Andhra Pradesh, Madhya Pradesh and Chhattisgarh — in 2009 remained very high at 10,765, or around 62 per cent of the total, though falling nearly five percentage points from 2008. Maharashtra remained the worst State for farm suicides for the tenth successive year, reporting 2,872. Though that is a fall of 930, it is still 590 more than in Karnataka, second worst, which logged 2,282 farm suicides.
Economist K. Nagaraj, author of the biggest study on Indian farm suicides, says, “That these numbers are rising even as the farmer population shrinks, confirms the agrarian crisis is still burning.”
Maharashtra has logged 44,276 farm suicides since 1997, over a fifth of the total 2,16,500. Within the Big 5, Karnataka saw the highest increase of 545 in 2009. Andhra Pradesh recorded 2,414 farm suicides — 309 more than in 2008. Madhya Pradesh (1,395) and Chhattisgarh (1,802) saw smaller increases of 16 and 29. Outside the Big 5, Tamil Nadu doubled its tally with 1,060, against 512 in 2008. In all, 18 of 28 States reported higher farm suicide numbers in 2009. Some, like Jammu and Kashmir or Uttarakhand, saw a negligible rise. Rajasthan, Kerala and Jharkhand saw increases of 55, 76 and 93. Assam and West Bengal saw higher rises of 144 and 295. NCRB farm data now exist for 13 years. In the first seven, 1997-2003, there were 1,13,872 farm suicides, an average of 16,267 a year.
In the next six years 1,02,628 farmers took their lives at an average of 17,105 a year. This means, on average, around 47 farmers — or almost one every 30 minutes — killed themselves each day between 2004 and 2009.
Lower their average
Among the major States, only a few including Karnataka, Kerala and West Bengal avoided the sharp rise these six years and lowered their average by over 350 compared to the 1997-2003 period.
In the same period, the annual average of farm suicides in the Big 5 States as a whole was more than 1,650 higher than it was in 1997-2003.

Sunday, December 26, 2010

வெண்மணியில் சங்கமித்த இன்சூரன்ஸ் ஊழியர்கள்



நேற்று 25 .12 . 2010  அன்றும் வர்க்கப்போரில் உயிர் நீத்த
வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம்
முழுதும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் வெண்மணியில்
திரண்டனர். அஞ்சலி என்பது வெறும் சடங்கல்ல.
அவர்களின் தியாகத்தை நெஞ்சிலேந்தி மனதில்
உரம் பெற்று போராட்டப் பயணத்தை மேலும்
உறுதியாக தொடர்வதற்காகத்தான். வெண்மணி
மண்ணில்ஒவ்வொரு முறையும் கால்
பதிககிறபோதும் நாம் நம்மை புதுப்பித்துக்
 கொள்கின்றோம் என்பதுதான்
உண்மை.

ராமையாவின் குடிசையில் வைத்த தீ போராட்ட
உணர்வை அழித்துவிடும் என ஆண்டைகள் போட்ட
கணக்கு தவறு என்றும் அந்த தீ ஒவ்வொரு
 உழைப்பாளி  நெஞ்சிலும்  இன்னமும் எரிந்து 
கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு 
ஆண்டு வெண்மணி தினத்தன்றும் 
நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

இவ்வாண்டும் வெண்மணி செல்வதற்கு 
முன்பாக திருவாரூரில்  சமூக ஒடுக்குமுறை
எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. தென் 
மண்டல தலைவர் தோழர் எம்.குன்னிகிருஷ்ணன் 
தலைமையேற்க, அகில இந்திய இணைச்செயலாளர்
தோழர் ஜே.குருமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு 
முன்னணியின் துணைத்தலைவர் தோழர் 
கு.ஜக்கையன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

உத்தப்புரம் பிரச்சினையில் காவல்துறையால் 
தாக்கப்பட்ட மாதர் சங்கப் பொறுப்பாளர் தோழர் 
எஸ்.கே.பொன்னுத்தாய் கௌரவிக்கப்பட்டார். 
எனது எலும்புகளை  உடைத்து விட்டால்  
உத்தப்புரம் போராட்டத்தை முடக்கி விடலாம். 
மற்ற தலைவர்களை தாக்கினால்  அடக்கி விடலாம்
என்று காவல்துறை கருதியது.  அப்படி அடங்கிப் 
போகின்ற அமைப்பு நாமல்ல என்றும் ஒரு 
தோழர் இல்லாவிட்டால் அடுத்த தோழர் 
அப்போராட்டத்தை  முன்னேடுத்துச்செல்வார்  என்று
காவல்துறை அறிந்திருக்கவில்லை  என்று அவர்
கூறிய வார்த்தைகள் இன்னும் ஒலித்துக் கொண்டே 
உள்ளது.

தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர்
கே.சுவாமிநாதனின் அற்புதமான நிறைவுரையோடு 
கருத்தரங்கம் நிறைவு பெற்று வெண்மணி நோக்கிய
பயணம் தொடங்கியது.


தோழர் எம். குன்னிகிருஷ்ணன்

 பங்கேற்றோர்

 தோழர் எஸ்.கே.பொன்னுத்தாய் கௌரவிப்பு

 தோழர் எஸ்.கே.பொன்னுத்தாய்

 தோழர் ஜே.குருமூர்த்தி 

தோழர் கு.ஜக்கையன்  

 தோழர் சுரேஷ் குமார், மதுரை

வெண்மணி இதழிற்கு வேலூர் கோட்டத்திலிருந்து
மேலும் 100  சந்தா  

 தோழர் ஆர்.தர்மலிங்கம்,

 களப்பலியானர்களின் பட்டியல் 
இந்த நினைவுத்தூணிலே 

 கம்பீரமாய் எழுந்து வரும்
வெண்மணி நினைவாலயம்

 தோழர் கே.சுவாமிநாதன்

 என்றென்றும் அதிர்வு தரும்
எழுச்சி தரும்,
வெண்மணி நினைவுச்சின்னம்

Saturday, December 25, 2010

உடையும் சுவர்கள்

கோவையில் தீண்டாமைப் ”பெருஞ்”சுவர் அகற்றம் !

சுவர் அகற்றப்பட்ட மகிழ்ச்சியில் குழந்தைகள் !
 
 கோவை அருகே நாகராஜபுரத்தில் கட்டப்பட்டிருந்த தீண்டாமைச்சுவர், தீண்டாமை ஒழிப்புமுன்னணியின் வலியுறுத்தலைத் தொடர்ந்து இடிக்கப்பட்டுள்ளது.

 


                                       
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கோவை அருகே உள்ள வேடபட்டி பேரூராட்சி பகுதியின் நாகராஜபுரம் தலித் குடியிருப்புகளை மறைத்து சாதீய ஆதிக்க வன்மத்துடன் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் தீண்டாமைச் சுவரை எழுப்பியிருந்தனர்.  கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டிருந்த இந்தத் தீண்டாமைச் சுவரை அகற்றி தலித் மக்கள் சென்று வர பாதை ஏற்படுத்தி தரவேண்டுமென தீண்டாமை ஒழிப்பு முன்னணி  வலியுறுத்தியிருந்த கோரிக்கையை வலியுறுத்தி அடுத்தடுத்த போராட்டங்களுக்கும் அமைப்பின் சார்பில் திட்டமிடப்பட்டது.  இதனிடையே தீண்டாமைச் சவரை ஆய்வு செய்த கோவை மாவட்ட அதிகாரிகளும் வீரிகேரளம் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளும் சனிக்கிழமையன்று தீண்டாமைச் சுவரை இடித்து அகற்றியுள்ளனர்.  அரசு அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையை மகிழ்ச்சியுடன் வரவேற்று பாராட்டுகிறோம்.  இப்பணியில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. உரிய முறையில் இப்பிரச்சினையில் தலையிட்டு தலித் மக்களின் உரிமையை நிலை நாட்டிய மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட நிர்வாகிகள் முன்னணி ஊழியர்களுக்கும்  பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.   இவ்வாறு அந்த அறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக இடிக்க வேண்டும் !

இதுகுறித்து கிராம மக்களிடம் பேசியபோது அவர்கள், “பல ஆண்டுகளாக பயனபடுத்திவந்த பாதையை அந்தச் சுவர் தடுத்துவிட்டது. இருப்பினும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் முயற்சியில் பாதை கிடைத்துள்ளது. அரசு அதிகாரிகள் இரண்டு இடங்களில் சுவர்களை இடித்துள்ளனர். இது ஆரம்பமாக இருக்கட்டும். சமூக அவலத்தின் அடையாளமான முழுச் சுவரையும் இடித்து தரைமட்டமாக்க வேண்டும்.” என்றனர்.
நன்றி மாற்று.காம்
இடிக்கப்பட்டது இந்த சுவர்தான்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு
வேலூர் கோட்டசங்கத்தின்
பாராட்டுக்கள்




Wednesday, December 22, 2010

WORKERS STRIKE AGAIN IN GREECE


greece1216பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் கிரீஸ் நாடு
 தொழிலாளர்களின்ஊதியங்களையும் மற்ற
சலுகைகளையும் வெட்டப் பார்க்கிறது.
அதற்கு எதிரான போராட்டம் அங்கே
வலுத்து வருகின்றது, காவல்துறை
அடக்குமுறைக்கும் அஞ்சாமல்.


 ATHENS—Workers at Greek public-transport companies walked off the job Thursday in a 24-hour strike that has led to early-morning traffic chaos on the streets of Athens.
During the morning rush hour, television images showed traffic jams stretching for kilometers on various main arteries of the city as Athenians resorted to private transport to get to work.

The strike, which has affected bus, trolley, tram and subway services, is the second all-day strike by public-transport workers this week and comes after a nationwide general strike Wednesday that paralyzed the country and led to violent protests in Athens. Rail workers at the national railroad company, OSE, are also striking Thursday.
The workers are protesting planned government pay cuts at state-owned enterprises. Greece's parliament on Tuesday passed a controversial omnibus bill that, among other things, foresees capping salaries at troubled state-owned businesses and cuts bonuses and other entitlements.
In May, Greece narrowly avoided default with the help of a €110 billion ($145.43 billion) bailout from the European Union and International Monetary Fund, in exchange for tough economic changes and a program to cut its budget deficit to below 3% of gross domestic product by 2014.
Next week, parliament will vote on the 2011 Greek government budget which includes further austerity measures, such as spending cuts and tax rises,
greece1216

Tuesday, December 21, 2010

43RD SESSION OF INDIAN LABOUR CONFERENCE

Govt Stand Encourages Employers’ Obstinacy
 K Hemalata

THE 43rd session of the Indian Labour Conference (ILC) met on November 23-24, about two years after the 42nd. As per the decision of the Standing Labour Committee, the agenda items discussed in the 43rd session were almost the same as in the 42nd: Global financial downturn – its impact – job losses – comprehensive package for protection of labour force; Problems of contract labour, social security, wages etc, and Amendments in the Contract Labour legislation; and Employment generation and skill development. Despite discussing for the third consecutive session the issue of contract labour that is becoming extremely pressing, the Indian Labour Conference could not take a common stand on the issue due to the obstinacy of the employers’ group, which probably was encouraged by the contents of the inaugural address of the prime minister himself.

PM FLEXIBLE TO
EMPLOYERS’ NEEDS
The prime minister, who inaugurated the 43rd ILC, could not find enough time to hear the views of the labour representatives. But he made it amply clear as to which side of the line he stood on the issue of labour laws. Completely ignoring the fact that around 94 per cent of workers in the country were in the unorganised sector where labour laws were either not applicable or not being implemented, Dr Singh said there was a need to consider the possible role of some of the labour laws in “contributing to rigidities in the labour market which hurt the growth of employment.” He indicated the willingness of the government to amend the labour laws to make them more flexible, of course to suit the needs of the employers. This naturally set the tone for the employers who stood their ground on continuing with the inhuman exploitation of the workers through the contract labour system.

Dr Singh had nothing to say by way of reassuring the workers who demonstrated unprecedented unity by going on an all-India strike on September 7 on five major demands including price rise, effective implementation of labour laws, adequate funds for universal social security for the unorganised sector workers, job protection and against disinvestment. Besides stating that his government was aware of the need to control price rise but was facing difficulties, he harped on his favourite theme of commitment to “economic reforms with a human face” and “the need to sustained growth of 9-10 per cent to make a dent on poverty, unemployment and under development.”

The CITU delegation to the ILC comprised its president A K Padmanabhan, general secretary Tapan Sen and secretaries Hemalata and Kashmir Singh. The views of the CITU on the agenda items were explained in a note that was circulated in the ILC.

Countering the claim of the government that India was able to come out of the impact of the global economic crisis without much suffering because of the initiatives of the government, the note pointed out that employment and social protection of the workers were left entirely to the mercy of the employers who were provided with four stimulus packages worth lakhs of crores of rupees, without linking them with job protection as unanimously demanded by the trade unions. The gross profit earned by the corporate sector increased by around 36 per cent every year including 2008–09 and 2009–10 when the global economic crisis had its worst impact. The proportion of profit to the wage bill, which was 44 per cent in 2001, rose to 176 per cent in 2008, indicating that the entire additional value generated through GDP was cornered by the employers. This was the result of the increasing exploitation of the workers, particularly those employed under irregular employment.

The CITU strongly criticised the agenda note of the government on contract labour for dealing more with the concerns and problems of the employers and trying to justify and finally seeking to legalise the violations of the existing law on contract labour. The agenda note was conspicuously silent about the unlawful deployment of contract labour even in regular production jobs or the so called ‘core jobs’ and denying them minimum wages. It demanded that employment relations should be redefined linking the principal employer to the worker at the lowest level, outsourcing be treated as contract, equal pay for the same and similar work to be incorporated in the main body of the legislation, regularisation of contract workers deployed in permanent or perennial jobs, minimum wages prevalent in the company, etc.

PALTRY GROWTH
IN EMPLOYMENT
On the agenda of employment generation, the CITU note pointed out that between 2005 and 2008 when economic growth was robust, the employment generated was only eight lakhs per year. In fact, this was the lowest rate of job growth in the last three decades for which data are available. CITU representatives pointed out that the Report on Employment and Unemployment Survey, conducted by the Labour Bureau of the Ministry of Labour and Employment, has recorded the unemployment rate as 9.4 per cent while it was higher at 10.1 per cent in the rural areas. The CITU demanded adoption of an employment intensive growth and development strategy and immediate lifting of the ban on recruitment and stopping the drive to abolish the existing posts in different central and state government departments and public sector undertakings. It has pointed out that simply ensuring strict implementation of the eight hour working day would create lakhs of additional jobs. It has also suggested extension of employment guarantee act to all individuals, to urban areas and filling up of the backlogs for SC/ST and OBC reserved posts etc as measures that would generate employment.

The ILC constituted three separate committees to discuss each of the agenda items. While the conference committees on global financial crisis and employment generation made unanimous recommendations, the employers and workers’ groups in the committee on contract labour were divided on the major issues.

The conference committee on ‘Global Financial Downturn’ recommended strict implementation of labour laws on lay offs, retrenchment, job losses, closures etc, devising of broad based social security including unemployment insurance, credit at concessional rate of interest to micro, small and medium enterprises besides traditional and export oriented industries, incentives to labour intensive industries, formulation of urban employment guarantee scheme, adequate funding to the Unorganised Workers’ Social Security Fund, extension of the scope of public distribution system to all unorganised workers in terms of commodities and coverage, investment in education and health care in rural areas etc. The committee also recommended more investment in infrastructure, non-conventional renewable source of energy, agro-based industries so as to stimulate domestic demand, fixation of national floor level minimum wages, extending employment guarantee from 100 to 180 days etc as long term measures. The committee was of the view that the stimulus and financial packages should continue and provide more focus on employment generation to compensate their loss in wages or job losses due to the economic slowdown.

The conference committee on ‘Employment Generation and Skill Development’  unanimously recommended that employment generation should be at the top of the agenda of the government and that each programme/scheme/economic activity of the government should look at this aspect; all round development of agriculture should be taken up as a priority with allotment of adequate funds for comprehensive infrastructure development in the rural areas, investment in agro based industries etc, increase in the workdays under MGNREGA to 200 days in a year and extension of employment guarantee to urban areas, ensure implementation of minimum wages of the state governments to the workers of MGNREGA, lifting of the ban on recruitment in public sector and government departments, broadening the definition of economic activity to include a number of women centric work and activities like home based work, etc, increase the wages of the Anganwadi employees and provide them with social security benefits etc.

Though the conference committee on ‘Problems of Contract Labour, Social Security, Wages etc, and Amendments in the Contract Labour Legislation’ could not come to a consensus on the recommendation, it adopted a unanimous resolution that all efforts should be made to ensure that the existing provisions of the Contract Labour (Regulation and Abolition) Act 1970 and rules made under it are implemented in letter and spirit; that the labour enforcement machinery in the centre and states should be strengthened by providing requisite manpower and other logistic facilities so as to ensure effective implementation of related legislations; that tripartite state advisory boards be constituted at the earliest; and that payment to contract workers be made through banks.

EMPLOYERS
GROUP’S OBSTINACY
While the workers’ group and the state governments’ group unanimously supported the proposals that where the contract labour performed the same or similar kind of work as the workmen, directly appointed by the principal employer, the wage rates, holidays, hours of work, social security and other conditions of service of the contract labour shall be the same as are available to the workmen on the rolls of the principal employer. This provision, which exists under the existing rules, needs to be incorporated in the principal act. They also recommended that the threshold limit of 20 for applying the act should be removed. The employers’ group did not agree with these proposals. The state governments’ group agreed to the suggestion of the workers’ group that workers should be absorbed/regularised in the event of abolition of contract labour under Section 10(2) of the Act, the employers’ group did not agree to it.

Even while increasingly employing contract labour in the same jobs done by the permanent workers and in jobs of perennial nature, the employers put forward the argument that they have to ‘look at the education and skill levels’ and were not ready to extend the same benefits. The argument of lack of skills was totally rejected by employee representatives. Kashmir Singh countered the employers’ argument asking ‘If the contract workers are not well educated and have low skills, why employ them at all and lower the quality of industrial production?’

Participating in the discussion, Tapan Sen criticised the lack of seriousness on the part of the government to practise tripartism in letter and spirit, except for the symbolic act of calling the Indian Labour Conferences as a ritual. He lambasted the short sightedness of the employers in their eagerness to garner profits of denying the due benefits to the workers, which was not only harming the workers but the country and its economy as well.

THANKS TO PEOPLE'S DEMOCRACY

Sunday, December 19, 2010

வருந்துகிறோம்

தோழர் ஆர்.சடயன்,( உதவியாளர், கள்ளக்குறிச்சி)  இன்று காலை
காலமானார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழரின் மறைவிற்கு நமது இதய அஞ்சலி. அவரை
பிரிந்து வாடும்  அவரது குடும்பத்தினருக்கு
 வேலூர்  கோட்டச்சங்கத்தின் 
ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

Friday, December 17, 2010

ஐந்தாவது தமிழ் மாநில மகளிர் மாநாடு

எல்.ஐ.சி உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் ஐந்தாவது
தமிழ் மாநில மகளிர் மாநாடு 30 ஜனவரி 2011  அன்று வேலூரில்
நடைபெறவுள்ளது. மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக
வரவேற்புக்குழு ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. 07  டிசம்பர் அன்று நடைபெற வேண்டிய அமைப்புக்கூட்டம்  மழை காரணமாக ஒத்தி
வைக்கப்பட்டு  தற்போது 28 டிசம்பர் 2010  அன்று வேலூர்
கோட்ட அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் தோழர் ஜி.லதா, தென் மண்டல
இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தோழர்
கே.சுவாமிநாதன், துணைத்தலைவர் தோழர் என்.ஆனந்தசெல்வி, 
இணைச்செயலாளர் தோழர் எம்.கிரிஜா, தென் மண்டல  எல்.ஐ.சி
 உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின்  இணை அமைப்பாளர்
தோழர் என்.கண்ணம்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

1996 ல் நடைபெற்ற தென் மண்டலக் கூட்டமைப்பின் 24 வது பொது
மாநாட்டிற்குப் பின்பாக வேலூர் கோட்டத்தில் நடைபெறுகின்ற 
மாநில அளவிலான பெரிய நிகழ்ச்சி இம்மாநாடுதான். வேலூர்
கோட்டத்தைப் பொறுத்தவரை நமக்கு இரு இலக்குகள் உள்ளது.

மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்துவது, மாநாட்டில் வேலூர் கோட்ட
மகளிர் தோழர்களின் பங்கேற்பை நூறு சதவிகிதம் உறுதிப்படுத்துவது.
இவை இரண்டுமே சாத்தியமான ஒன்றுதான். இந்த இலக்குகளை
நோக்கி முன்னேறுவோம். வெற்றி காண்போம்.

தோழர் பாப்பா உமாநாத் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி




தோழர் பாப்பா உமாநாத் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில்
ஒருவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் முன்னாள்
தமிழக சட்டப்பேரவை உறுப்பினருமான தோழர் பாப்பா உமாநாத் அவர்கள்
இன்று ( 17 .12 2010 ) காலமானார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தியாகத்தின் அடையாளமான தோழர் பாப்பா உமாநாத் அவர்களின்
வாழ்க்கை    பொது வாழ்வில் ஈடுபடும் அனைவருக்கும் ஒரு பாடம்.
அவர்களின் நெஞ்சுறுதி   போற்றத்தக்கது.  கம்யூனிஸ்ட் இயக்கத்தை
தடை செய்து அதன் உறுப்பினர்களை    அரசு வேட்டையாடிக்
கொண்டிருந்த நேரம் அவரும் அவரது தாயாரும் சிறையில்
அடைக்கப்பட்டனர். அவரது அன்னை லட்சுமி சிறையிலேயே
இறந்து போக  கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து
விலக ஒப்புக்கொண்டால்தான் அவரது உடலை
இறுதியாக பார்க்க அனுமதிக்க முடியும் என்று நிபந்தனை
போட்ட போது   அதை ஏற்க மறுத்து கொண்ட கொள்கையிலும்
இணைந்த இயக்கத்திலும்    உறுதியாக இருந்த தோழரின் அரும்
பணிகள் காரணமாக அனைத்திந்திய    ஜனநாயக மாதர் சங்கம்
 இன்று வலிமையான அமைப்பாக உள்ளது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில சிறப்பு மாநாடு மூன்று
ஆண்டுகளுக்கு முன்பு வேலூரில் நடைபெற்றபோது அவ்வமைப்பின்
மாநிலக்குழுக் கூட்டம் நம் சங்க அலுவலகம் சரோஜ் இல்லத்தில்
நடந்தது. அப்போது நம் சங்க அலுவலகத்திற்கு தோழர் பாப்பா உமாநாத்
அவர்கள் வந்துள்ளார் என்பது நமக்கு பெருமையளிக்கிறது.

தோழர் பாப்பா உமாநாத் அவர்களுக்கு செவ்வணக்கம்!

வெண்மணி சங்கமம் 2010

தமிழகம் முழுதிலிருந்தும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்
தோழர்கள் தங்களின் வர்க்கக் கடமையை நினைவு படுத்தி எழுச்சி கொள்ளும் வெண்மணி தினத்தன்று  இவ்வாண்டு சமூக ஒடுக்குமுறை எதிர்ப்பு கருத்தரங்கம் நடத்துவதென தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர்
கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. தென் மண்டலத் தலைவர்
தோழர் எம்.குன்னிகிருஷ்ணன் அவர்களின் தலைமையில்  திருவாரூரில் 
நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு
முன்னணியின் துணைத்தலைவர் தோழர் எ.ஜக்கையன், அகில இந்திய இணைச்செயலாளர் தோழர் ஜே.குருமூர்த்தி, ஆகியோர் உரையாற்ற உள்ளனர். உத்தப்புரம் கிராமமக்களுக்கான போராட்டத்தில் காவல்துறை
அடக்குமுறைக்கு உள்ளான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கப் பொறுப்பாளர் தோழர் எஸ்.கே.பொன்னுத்தாய்  கௌரவிக்கப் படவுள்ளார். 

வேலூரில் இருந்தும் விழுப்புரத்திலிருந்தும்  இரு வாகனங்கள் வெண்மணி 
நோக்கி புறப்படவுள்ளன.  24 .12 .2010  இரவு திருவாரூர் அடைவது என
திட்டமிடப்பட்டுள்ளது.

வெண்மணியில் சங்கமிப்போம்,  தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவோம்
ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் முன்னேறுவோம்

கடந்த ஆண்டு வெண்மணி சங்கமம் புகைப்படங்களில்
வெண்மணி நினைவாலய நிதி வழங்கும் நிகழ்ச்சி மற்றும்
வெண்மணிப் பயணம்



 















ªõ

Thursday, December 16, 2010

எதிர் கால இயக்கங்கள்



அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வைர விழா ஆண்டு
22 வது பொது மாநாடு பல்வேறு இயக்கங்களை மேற்கொள்வது  என
முடிவெடுத்துள்ளது.  அவற்றை கீழே அளித்துள்ளோம்.  டிசம்பர் முதல்
நாள் அன்று பங்கு விற்பனை எதிர்ப்பு தினம் அனுசரித்துள்ளோம். மற்ற
இயக்கங்களையும் வெற்றிகரமாக அமுலாக்குவோம்.

1st December 2010                           Anti Disinvestment Day
                                                            (in solidarity with the BSNL                                                             strike opposing the disinvestment of BSNL)

21st December 2010                         Demonstrations demanding solution for issues relating to housing loans being sanctioned by HFL. (Lunch hour demonstrations at Divisional Headquarters and submission of memorandum to the officer-in-charge in a committee level deputation)
                                     
19th January 2011                             Protect Nationalised Insurance Day (on the day of nationalisation of life insurance)
                                                            Press meet during the day. Candle light procession or any other suitable programme

23rd February 2011                          Workers’ March to Parliament
                                                            Demonstrations during lunch hour at all centres.           
                                                            Conventions at bigger centres in the States as a run up to the March, to campaign on the issues involved in the Workers’ March

15th February 2011 to                      Pamphlet distribution highlighting performance of
28th February 2011                           LIC and four Public Sector General Insurance
                                                            Companies.

13th May 2011                                   General Insurance Nationalisation Day

JANUARY 2011 TO JUNE 2011       Trade Union Classes at all branch centres culminating in a State/Zonal level classes. 

1st July 2011                                       Foundation Day of AIIEA. Flag hoisting and programmes involving the employees and their families. Culmination of Diamond Jubilee year celebrations

January- April 2011                         Campaign on the need to protect the left movement
                                                            (Seminars/conventions at district level and bigger centres)

Around March/April 2011             Programme demanding recruitment and solution to temporary and Part Time employees’ issues (date to be decided by AIIEA)

வெண்மணிக்கு வேலூரில் 103 சந்தா


 
அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் வெண்மணி தியாகிகள் நினைவு
சிறப்பு கருத்தரங்கம்

வேலூர், 15 .12 .2010 

மிகக்கடுமையான மழையிலும் சிறப்பாக நடைபெற்றது.   தமிழ்நாடு தீண்டாமை 
ஒழிப்பு  முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ் 
சிறப்புரையாற்றினார்.  டாக்டர் அம்பேத்கரின் போராட்டங்களை நினைவுகூர்ந்த 
அவர் இன்று தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளில் நிலவும் கொடுமைகள்
 குறித்தும்  முன்னணி மேற்கொண்டு வரும்    நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தார்.

சமூக விரோத சக்திகளால் குடியாத்தம் நகரில் வீடுகள் இடிக்கப்பட்டு  நடு வீதியில்  தவிக்கும் மக்களின் வழக்கு நிதியாக வேலூர் கோட்டத் தோழர்கள் அளித்த நிதி ரூபாய் 10 ,000  தோழர் சாமுவேல்ராஜிடம் அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெளியிடவுள்ள ' வெண்மணி'
இதழிற்கான ஓராண்டு சந்தா 103  வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட ஆறு மணி
நேரத்திற்குள் வேலூர் கோட்ட அலுவலகக்கிளை, வேலூர் கிளை, காட்பாடி,
பி&ஜி.எஸ், குடியாத்தம், ராணிப்பேட்டை, போளூர், மற்றும் பொது இன்சூரன்ஸ்   கிளைகள் 103  சந்தாக்களை திரட்டியது பாராட்டுதலுக்குரியது. 

இந்த உற்சாகமும் வேகமும் வேலூர் கோட்டம் முழுதும் எதிரொலிக்கும்!  

 தோழர் சாமுவேல்ராஜ் சிறப்புரை




வெண்மணி சந்தா - பொது இன்சூரன்ஸ் 
 வெண்மணி சந்தா - வேலூர் கிளை



வெண்மணி சந்தா - வேலூர் கோட்ட அலுவலகக் கிளை


வெண்மணி சந்தா - ராணிப்பேட்டை

குடியாத்தம் வழக்கு நிதி







வெண்மணி சந்தா - குடியாத்தம் கிளை

Blog Archive