அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் வெண்மணி தியாகிகள் நினைவு
சிறப்பு கருத்தரங்கம்
வேலூர், 15 .12 .2010
மிகக்கடுமையான மழையிலும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை
ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ்
சிறப்புரையாற்றினார். டாக்டர் அம்பேத்கரின் போராட்டங்களை நினைவுகூர்ந்த
அவர் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் கொடுமைகள்
குறித்தும் முன்னணி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தார்.
சமூக விரோத சக்திகளால் குடியாத்தம் நகரில் வீடுகள் இடிக்கப்பட்டு நடு வீதியில் தவிக்கும் மக்களின் வழக்கு நிதியாக வேலூர் கோட்டத் தோழர்கள் அளித்த நிதி ரூபாய் 10 ,000 தோழர் சாமுவேல்ராஜிடம் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெளியிடவுள்ள ' வெண்மணி'
இதழிற்கான ஓராண்டு சந்தா 103 வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட ஆறு மணி
நேரத்திற்குள் வேலூர் கோட்ட அலுவலகக்கிளை, வேலூர் கிளை, காட்பாடி,
பி&ஜி.எஸ், குடியாத்தம், ராணிப்பேட்டை, போளூர், மற்றும் பொது இன்சூரன்ஸ் கிளைகள் 103 சந்தாக்களை திரட்டியது பாராட்டுதலுக்குரியது.
இந்த உற்சாகமும் வேகமும் வேலூர் கோட்டம் முழுதும் எதிரொலிக்கும்!
தோழர் சாமுவேல்ராஜ் சிறப்புரை
வெண்மணி சந்தா - பொது இன்சூரன்ஸ்
வெண்மணி சந்தா - வேலூர் கிளை
வெண்மணி சந்தா - வேலூர் கோட்ட அலுவலகக் கிளை
வெண்மணி சந்தா - ராணிப்பேட்டை
குடியாத்தம் வழக்கு நிதி
வெண்மணி சந்தா - குடியாத்தம் கிளை
We request all the Comrades to
ReplyDeletetake use of this page and also
offer your valauable suggestions
to improve it
With Greetings
S.Raman