Thursday, February 10, 2011

ருமேனியர்கள் சொல்கிறார்கள் கம்யூனிசமே மேம்பட்டது!


Posted: 10 Feb 2011 02:11 AM PST


ருமேனியாவில் தற்போதுள்ள முதலாளித்துவ ஆட்சியைக் காட்டிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியிலிருந்தபோது வாழ்க்கைத்தரம் சிறப்பாக இருந்ததாக சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பில் பெரும்பான்மையானவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் பங்கெடுத்தவர்களில் பெரும்பான்மையோர் கம்யூனிச சிந்தனையை ஆமோதிக்கின்றனர், 60 சதவிகிதம் பேர் கம்யூனிசம் நல்ல சிந்தனை என்று தெரிவித்துள்ளனர். 4 வருடங்களுக்கு முன்பாக இதே போல கருத்து வாக்கெடுப்பு நடத்தியபோது இருந்ததைக் காட்டிலும் தற்போது கம்யூனிசம் மீதான ஈடுபாடு அதிகரித்துள்ளதாக வாக்கெடுப்பை நடத்தியவர்கள் தெரிவித்தனர்.

ருமேனிய கருத்து வாக்கெடுப்பு நிறுவனமான சிஎஸ்ஓபி, தனது கருத்துக்கேட்பில் 49 சதமானவர்கள், மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் நிக்கோலஸ் சேசெஸ்கு ஆட்சிக்காலத்தில் வாழ்க்கை இன்னும் மேம்பட்டதாக இருந்ததாகக் கூறியுள்ளனர். அதே நேரம், வெறும் 23 சதமானவர்கள் மட்டுமே இப்போது நல்ல வாழ்நிலை கொண்டிருப்பதாகச் சொல்லியுள்ளனர். மற்றவர்கள் நடுநிலை அல்லது “தெரியவில்லை” என்று பதில் கூறியுள்ளனர். இதில் பங்கேற்றவர்கள், தங்கள் நேர்மறையான மதிப்பீட்டிற்கு தெரிவித்துள்ள காரணங்களைப் பார்த்தபோது, 62 சதமானவர்கள் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு என்றும், 26 சதமானவர்கள் நல்ல வாழ்க்கைத்தரம் என்றும், 19 சதமானவர்கள் அனைவருக்கும் வீட்டுவசதி என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்தெடுப்பை நடத்திய நிறுவனம், ஐஐசிஎம்இஆர் எனப்படும் அரசு உதவிபெற்ற நிறுவனமாகும். (அந்த நிறுவனப் பெயரின் விரிவாக்கம் - கம்யூனிசத்தின் குற்றங்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட ருமேனிய நினைவுகள் குறித்த ஆய்வுக்கான அமைப்பு என்பதாகும்) அவர்கள் கம்யூனிச அச்சுறுத்தல்கள் குறித்து மக்களைப் “பயிற்றுவிப்பதற்காக” இந்த ஆய்வைச் செய்துள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றத்திலேயே மிக மோசமானது, கம்யூனிச ஆட்சியின்போது உங்கள் குடும்பம் எத்தகைய பாதிப்புக்கு உள்ளானது? என்ற கேள்விக்கான பதில்களாகும். மிகக் குறைவாக 7 சதவீதமானவர்களே தாங்கள் கம்யூனிச ஆட்சியின்கீழ் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர், அத்துடன் 6 சதமானவர்கள் தாங்கள் தனிப்பட்ட முறையில் எந்த பாதிப்பையும் சந்திக்கவில்லை என்றாலும் குடும்ப உறவுகளின் வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதிலும், தரப்பட்டுள்ள காரணங்களில், குறிப்பானது பொருளாதாரம். 1980களில் ருமேனியாவின் வெளிநாட்டுக் கடன்களை திரும்பச் செலுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சிக்கனத்திட்டத்தின்போது ஏற்பட்ட பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டதாக பெரும்பாலானவர்கள் சொல்லியுள்ளனர். ஒரு சிறிய அளவிலானவர்கள் மட்டுமே, தங்கள் சொத்துக்கள் தேசியமயமாக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மற்றும் ஒரு பகுதியினர் கம்யூனிஸ்ட் ஆட்சிக்காலத்தில் தாங்களோ அல்லது தங்கள் குடும்ப உறுப்பினர்களோ சிறையில் அடைக்கப்பட்டதாகச் சொல்லியுள்ளனர் (பாதிக்கப்பட்டதாக கூறியவர்களிலும் 6 சதமானவர்கள் இந்த பதிலை கூறியுள்ளனர்).

20 ஆம் நூற்றாண்டு கம்யூனிசம் குறித்து பொதுவான நேர்மறை மதிப்பீட்டிற்கு ருமேனியர்கள் மட்டும் வரவில்லை என்று ஐஐசிஎம்இஆர் குறிப்பிடுகிறது. மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், கடந்த 2009 ஆம் ஆண்டு பியூ ஆய்வு மையம் என்ற அமெரிக்க நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின் படி, முன்னாள் சோசலிச நாடுகளின் மக்களில் குறிப்பிட்ட பகுதியினர் முதலாளித்துவ ஆட்சியைக் காட்டிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியிலிருந்தபோது வாழ்க்கைத்தரம் சிறப்பாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். அந்த விபரங்கள் பின்வருமாறு: போலந்து 35 சதவீதம், செக் குடியரசு 39 சதவீதம், ஸ்லோவேகியா 42 சதவீதம், லிதுவேனியா 42 சதவீதம், ரஷ்யா 45 சதவீதம், பல்கேரியா 62 சதவீதம், உக்ரெய்ன் 62 சதவீதம், ஹங்கேரி 72 சதவீதம்.

ருமேனியாவில் மேற்கொள்ளப்பட்ட 2010 சிஎஸ்ஓபி மற்றும் ஐஐசிஎம்இஆர் கருத்துக் கணிப்புகள், “சந்தைப் பொருளாதாரத்தின்” கீழ் பெற்றுள்ள அதிகப்படியான அனுபவங்களில் இருந்து, மக்கள் முதலாளித்துவத்துக்கு எதிராகவும், கம்யூனிசத்துக்கு ஆதரவாகவும் மாறி வருகிறார்கள் என்று காட்டியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது. 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 53 சதவீதம் ருமேனியர்கள் கம்யூனிசத்திற்கு ஆதரவான கருத்தை தெரிவித்தனர். 2010 வாக்கெடுப்பில் அந்த எண்ணிக்கை 61 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ருமேனியாவின் மருத்துவத்துறை தற்போது நெருக்கடியில் சிக்கியுள்ளது மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் தற்போது 25 சதவீத சம்பளக் குறைப்பை சந்தித்திருக் கிறார்கள். முதலாளித்துவம் மறு அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பின் னர் நடந்தவைகளை - அதிகரித் திருக்கும் ஏழ்மை, வேலையின்மை மற்றும் பாதுகாப்பின்மை இன்னும் மற்றவைகளை தொகுத்துப் பார்க் கையில் சிஎஸ்ஓபி கணிப்பு முடிவு கள் ஆச்சரியம் தருவதாக இல்லை

நன்றி - மாற்று  வலை தளம் 

No comments:

Blog Archive