சென்னை, பிப். 3-
குடியாத்தத்தில் தலித் மக்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் போராட் டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெற்றி பெற்றுள்ளது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாராட்டு தெரிவித் துள்ளது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே. சாமு வேல் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: வேலூர் மாவட்டம், குடியாத்தம், தங்கம்நகர் அரசு புறம்போக்கு இடத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 2 தலை முறைகளாக 36 தலித் மற்றும் இஸ்லா மிய ஏழை குடும்பங்கள் வசித்து வந்த னர். இக்குடும்பங்களை மிக அராஜக மான முறையில் திமுகவைச் சேர்ந்த மொசைக் செல்வம் என்பவர் பயங்கர ஆயுதங்களுடன் சமூக விரோதிகளைப் பயன்படுத்தி பலவந்தமான முறையில் விரட்டி அப்புறப்படுத்தி விட்டு கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்துக் கொண் டார். வஃக்பு போர்டுக்குச் சொந்தமான ஒரு பகுதி இடத்தையும் ஒரு வழக்குப் போட்டு சேர்த்து வளைத்துக் கொண் டார். இந்த இடத்தை பிளாட்டுகளாக மாற்றி விலைக்கு விற்று கொள்ளை யடிக்க முயன்ற அவரது நடவடிக்கை களுக்கு திமுக அரசு நிர்வாகம் துணை நின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர், குடியாத்தம் தாசில் தார் உள்பட பல அதிகாரிகளிடம் முறை யிட்டும் எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை. இந்நிலையில் இம்மக் கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற் றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உதவியை நாடினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க் சிஸ்ட் கட்சி சார்பாகவும், மாவட்ட நிர் வாகத்திடம் தீர்வு காணக் கடிதம் கொடுத்து நேரடியாக வற்புறுத்தியும் பலனில்லை. தமிழக முதலமைச்ச ருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ் ணன் கடிதம் எழுதினார். தமிழக முதல் வர் ஒடுக்கப்பட்ட இந்த ஏழை எளிய மக்களின் பிரச்சனைகளை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக 12.9.2010இல் தோழர்கள் பி. சம்பத் (தலைவர்), கே. சாமுவேல்ராஜ் (பொதுச் செயலாளர்), நாராயணன் (சிபிஎம் மாவட்டச் செயலாளர்), ஜி. லதா எம்.எல்.ஏ., கிருஷ்ணன், காட்டையன் (அருந்ததியர் மக்கள் கட்சி) மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டத் தலைவர் கள் தலைமையில் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இப்போராட்டத்திற்காக தலைவர்கள் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களும் இதர ஜனநாயகப் பிரிவினரும் ஊர்வல மாக சென்ற போது காவல்துறையின் உதவி மாவட்ட கண்காணிப்பாளர் தடுத்து நிறுத்தி, அரசு நிர்வாகம் ஆர்.டி.ஓ. தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த் தைக்கு ஏற்பாடு செய்திருப்பதாக கூறி னார். தலைவர்களும் ஏற்றுக் கொண்டு ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை யில் பங்கேற்றனர். வட்டாட்சியர், ஆதி திராவிடர் நல தாசில்தாரும் பேச்சுவார்த் தையில் பங்கேற்றனர். மொசைக் செல் வம் நடத்திய அராஜகத்தையும் பாதிக்கப் பட்ட மக்களின் பிரச்சனைகளையும் தலைவர்கள் எடுத்துச் சொன்னபோது அதிகாரிகளால் மறுக்க முடியவில்லை. 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்கவும், மொசைக் செல்வத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை சர்வே செய்து அரசு இடம் ஆக்கிரமிக்கப்பட்டி ருந்தால் மீட்கவும், மொசைக் செல்வம் மற்றும் சமூக விரோதிகள் மீது உரிய நட வடிக்கை எடுக்கவும் ஒப்பந்தம் உரு வாகி தலைவர்களும், ஆதிதிராவிடர் நல தாசில்தாரும் கையெழுத்திட்டனர். இந்நிலையில் திடீரென வந்த ஒரு தொலைபேசி அழைப்பையடுத்து ஆர்.டி.ஓ., வும் வட்டாட்சியரும் அலுவல கத்தை விட்டு அவசர அவசரமாக சொல்லிக் கொள்ளாமல் ஜீப்பில் புறப் பட்டுச் சென்றனர். மாவட்ட உதவி காவல்துறை அதிகாரி, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தலைவர்களிடம் “நீங் களும் உங்களோடு வந்த மக்களும் கைது செய்யப்படுகிறீர்கள்” என்றார். காரணம் கேட்ட போது மேலிடத்து உத்தரவு என்றும் அதற்குமேல் தன்னால் எதுவும் சொல்ல முடியாது என்றும் கூறி னார். சென்னையில் முதல்வர் அலு வலகத்திலிருந்து வந்த வாய்மொழி உத் தரவு அடிப்படையிலேயே ஆர்.டி.ஓ. இடத்தை காலி செய்ததும் தலைவர்கள் கைது செய்யப்பட்டதும் நடந்ததாக தகவல்கள் வெளியாகின. கைது செய் யப்பட்ட தோழர்கள் பி. சம்பத், சாமு வேல்ராஜ், நாராயணன், லதா எம்.எல்.ஏ., கிருஷ்ணன், காட்டையன் (அருந்ததியர் மக்கள் கட்சி) மற்றும் மாவட்ட தலை வர்களும் பாதிக்கப்பட்ட மக்களுமாக 56 பேர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட னர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை களை கேட்டதற்காக அதிகாரிகளுடன் ஒப்பந்தம் செய்தபிறகு கைது செய்து சிறையில் அடைத்த தமிழக அரசின் கொடுமையைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.சிறையில் அடைக்கப்பட்டவர் கள் ஒரு வார காலம் கழித்து ஜாமீனில் வெளியே வந்தனர். இருப்பினும் ஒடுக்கப்பட்ட மக்க ளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணாத தால் அம்மக்கள் இருக்க இடம் இன்றி தனியார் ஒருவர் தயவில் பாதுகாப்பற்ற கூடாரத்தில் கைக்குழந்தைகளுடன் தங்கியிருந்தனர். தாமதமின்றி தீர்வு காண மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற் றும் பயனில்லாத நிலையில் 3.2.2011 அன்று வேலூர் மாவட்ட ஆட்சித் தலை வர் அலுவலகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக தோழர்கள் பி. சம்பத், கே. பாலபாரதி எம்.எல்.ஏ., கே. சாமுவேல்ராஜ், நாராயணன், லதா எம்.எல்.ஏ., மற்றும் மாவட்டத் தலை வர்கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான் மாவட்ட நிர்வா கம் அவசர அவசரமாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடத்திற்கான பட்டாக்கள் வழங்குவதற் கான ஏற்பாடுகளைச் செய்தது. அப் போதும் மொசைக் செல்வத்தின் நிர்ப் பந்தமான கட்டுப்பாட்டுக்குள் இருந்த 12 குடும்பங்களுக்கு முதலில் பட்டா வழங்கும் கைங்கரியத்தையே மாவட்ட நிர்வாகம் செய்தது. அனைத்து பாதிக்கப் பட்ட மக்களுக்கும் பட்டா வழங்க தோழர் கள் நாராயணன், லதா எம்.எல்.ஏ., உள்பட தலைவர்கள் நிர்ப்பந்தம் செய்து போராட்ட நடவடிக்கைகளை தீவிரப் படுத்திய பிறகு அனைத்து பகுதி மக்க ளுக்கும் பட்டா வழங்குவதற்கான உத்த ரவை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளி யிட்டார். மொசைக் செல்வம் வளைத் துள்ள இடத்தை ஒருவார காலத்திற்குள் சர்வே செய்வதாகவும் மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. 2-2-2011-இல் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் மாற்று இடத்திற்கான பட்டாக்கள் வழங் கப்பட்டது. பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் லதா எம்.எல்.ஏ., நாராயணன் உள்பட சிபிஐ(எம்)-தீண்டாமை ஒழிப்பு முன் னணி தலைவர்கள் பங்கேற்றனர். இப் பின்னணியில் 3-02-2011ல் நடைபெறு வதாக இருந்த மறியல் தள்ளி வைக் கப்பட்டது. தலித் மக்களை மிரட்டி பலவந்த மாக அப்புறப்படுத்திய மொசைக் செல் வத்தின் மீது தாமதமின்றி கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், மொசைக் செல்வம் வளைத்த இடத்தை ஏற்றுக் கொண்டபடி சர்வே செய்து அரசு நிலங்களை ஆக்கிரமித்தவரிடமிருந்து மீட்குமாறும் மாவட்ட நிர்வாகத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற் றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 5 மாத கால தொடர்ச்சியான முயற்சி களாலும், மாவட்ட நிர்வாகத்தின் அடக்கு முறைகளை எதிர்த்து சிறைக் கொடுமை களை அனுபவித்தது உள்ளிட்டு வலு வான போராட்டங்களாலும், தங்களுக்கு பட்டா வழங்கப்படுவதாக மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கால தாமதமாகவேனும் மாவட்ட அதிகாரிகள் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. இப்போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தரப்பு மக்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி தனது நெஞ்சார்ந்த பாராட்டுதல் களை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
நன்றி - தீக்கதிர் நாளிதழ்
| இப்போராட்டத்திற்கு துணை நின்ற , நிதி அளித்த
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்
அனைத்து தோழர்களுக்கும் நன்றி.
|
சரோஜ் இல்லம், அருகதம்பூண்டி மேட்டுத் தெரு, வேலூர்- 4 (தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் மூலம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்துடன் இணைக்கப்பட்டது).
Saturday, February 5, 2011
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் குடியாத்தம் போராட்டம் வெற்றி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2011
(112)
-
▼
February
(10)
- நிதிநிலை அறிக்கை பற்றி
- புதிய சர்வதேச தொழிற்சங்கக் கூட்டமைப்பு உதயம்
- உழைப்பாளி மக்களின் நாடாளுமன்றம் நோக்கிய பேரணிக்கு ...
- எகிப்து: விடுதலை வேட்கையின் புரட்சி முழக்கம்!
- எதிர்காலம் பத்திரமாய் ... எ...
- நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி
- எல்.ஐ.சி உழைக்கும் மகளிர் ஐந்தாவது தமிழ் மாநில...
- இன்சூரன்ஸ் துறை தேசியமய நாள் - புகைப்பட பதிவுகளில்
- ருமேனியர்கள் சொல்கிறார்கள் கம்யூனிசமே மேம்பட்டது!
- தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் குடியாத்தம் போராட்டம்...
-
▼
February
(10)
No comments:
Post a Comment