Thursday, June 30, 2011

Some Important Photos

Our A.I.I.E.A is  completing its Diamond Jubilee Year 
Tomorrow. Some Important photos are published  here

                              1) AIIEA  FORMATION
                Com P.T.Dhonde, First General  Secretary, A.I.I.E.A

              Com Rajini Patel, First President, A.I.I.E.A
             ILACO  VIGIL STRUGGLE AT CALCUTTA
           LIC BUILDING, CHENNAI  LOCKED OUT IN 1974


MORE PHOTOS IN NEXT POST

வைர விழா ஆண்டு வாழ்த்துக்கள்.

நாளை அகில இந்திய இன்சூரன்ஸ்  ஊழியர் 
சங்கத்தின்  வைர விழா ஆண்டு நிறைவு நாள். 
ஆல மரமாய் வியாபித்து  இன்சூரன்ஸ் 
ஊழியர்களுக்கு  நிழல் தந்து வாழும்  
வரலாறாய்  திகழும் அமைப்பு நமது 
அகில  இந்திய இன்சூரன்ஸ்  ஊழியர் சங்கம்.
ஏ.ஐ.ஐ.இ.ஏ எனும்  மாபெரும் அமைப்பை 
உருவாக்கிய, உருக்கு  போல உறுதியாக்கிய
அனைத்து  தியாக முன்னோரையும் 
நன்றியோடு நினைவு கொள்வோம். 


அவர்தம்  காட்டிய போராட்ட வழியில் நம்
பயணம் தொடரட்டும். 
முன்னை விட  வேகமாக,   
முன்னை விட உறுதியாக,
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்
அனைத்து தோழர்களுக்கும் 
மனமார்ந்த  வாழ்த்துக்கள். 
 

Sunday, June 12, 2011

மாதிரி கடிதம் மேலும் சில

மாதிரி கடிதம் 6  - தந்தைக்கு பணம் கேட்டு எழுதும்
கடிதம்                                                                                                                       

  த.சிங்காரம் 
                                                                                                                         சென்னை 
                                                                                                                         12 . 06 . 2011 

அன்புள்ள அப்பா , 
                                      நலம் நலமறிய ஆவல். சிங்காரம் எழுதுவது. நான் இங்கு நன்கு படிக்கிறேன். கல்லூரியில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். எனது கல்லூரியில் ஒரு வாரம் டெல்லிக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்ல உள்ளனர். அங்குள்ள செங்கோட்டை, நாடாளுமன்றம், குதுப் மினார், மற்றும் பல இடங்களை பார்க்க உள்ளோம். பின்பு ஆக்ராவில் உள்ள தாஜ் மகாலையும் பார்க்க உள்ளோம். அதோடு மட்டும் அல்லாமல் பல தொழிற்சாலைகளையும் பார்க்க உள்ளோம். இது ஒரு சுற்றுலா மட்டும் அல்லாமல் அறிவை வளர்க்க ஒரு சந்தர்ப்பமாகவும் இருக்கும் என்று எங்கள் தலைமை ஆசிரியர் கூறுகிறார். எனவே நானும் இச்சுற்றுலாவில் பங்கேற்க விரும்புகிறேன். அதனால் சுற்றலா செல்வதற்கு தேவையான பணம் ருபாய் 10000 மற்றும் என் செலவிற்கும்  பணம் கொடுத்து அனுப்புங்கள். 
                                இப்படிக்கு தாங்களின் அன்பு மகன் 
                                                                                                                 த.சிங்காரம்   

************************************************************************************      மாதிரி கடிதம் 7  - நண்பனை ஊருக்கு வரச்சொல்லி அழைக்கும் கடிதம்

                                                                                                                            வ.வெற்றிவேல்
                                                                                                                               வேலூர்   
                                                                                                                               12 . 06 . 2011  


அன்புள்ள சக்திவேல்,
                                                நலம் நலமறிய ஆவல். வெற்றிவேல்  எழுதுவது. இப்போது விடுமுறை காலம். நீ ஒரு முறை இங்கு வேலுர்க்கு வர வேண்டும் என்று நன் ஆசை படுகிறேன். இங்கு சுற்றி பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. பொற்கோயில், வேலூர் கோட்டை, ஜலகண்டேஸ்வரர் கோயில் போன்ற இடங்கள் வேலூரில் பெருமை. இது மட்டும் இல்லாமல் விடுமுறைக்கேன்றே இங்கு அரசுப் பொருட்காட்சியும் வந்துள்ளது. எனவே இங்கு நாம் இருவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கலாம். பாண்டிச்சேரி எப்படி உள்ளது. அதைப் பற்றி நீ எழுது. 
                                   இப்படிக்கு உன் பதிலை ஆர்வத்துடன் எதிர் பார்துக்க் கொண்டிருக்கும் உன் நண்பன் 
                                                                                                         வ.வெற்றிவேல் 
***********************************************************************************

மாதிரி கடிதங்கள்

மாதிரி  கடிதங்கள் 

கடிதம்  எழுதும் போது  கவனத்தில்  கொள்ள வேண்டியது.


1 ) அனுப்புனர்  அல்லது  விடுநர்  பெயர், முகவரி குறிப்பிட வேண்டும். 

2 ) பெறுனர் பெயர், முகவரி குறிப்பிட வேண்டும்.

3 ) யாருக்கு கடிதம் அனுப்பப்படுகின்றது  என்பதைப்பொருத்து  
எப்படி  அழைப்பது  என்று  முடிவு செய்து  எழுத  வேண்டும்.


தலைமை ஆசிரியர்,  மேலதிகாரி,  அரசு  அதிகாரி  என்றால்  மதிப்பிற்குரிய  ஐயா  என  அழைக்க வேண்டும்.


பெற்றோர், உறவினர், சகோதரன், சகோதரி, நண்பன் என்றால்
அன்புள்ள   என  அழைக்க வேண்டும்.


வேறு  வெளியாட்களாக  இருப்பின்  அன்புடையீர்  என அழைக்க வேண்டும்.

4 )  கடிதத்தின்  பொருள்  என்ன என்பதை  எழுத வேண்டும்.

5 ) உள்ளடக்கம் -  நாம்  என்ன  சொல்ல  விரும்புகிறோமோ, அதை  
சுருக்கமாக  எழுதிட வேண்டும். 


6 )  இறுதியில்   ஊர், நாள்  ஆகியவற்றை  கடிதத்தின்  வலது  மூலையில்
எழுதிட வேண்டும்.

7 )  இடது மூலையில்  யாருக்கு  கடிதம்  அனுப்பியுள்ளோம்  என்பதைப் 
பொறுத்து  தங்களின் பணிவான, அன்பான, உண்மையான  என்று  
எழுதிட வேண்டும். 


தலைமை ஆசிரியர்,  மேலதிகாரி,  அரசு  அதிகாரி  என்றால்  தங்களின் பணிவான   என  நிறைவு செய்திட  வேண்டும்.


பெற்றோர், உறவினர், சகோதரன், சகோதரி, நண்பன் என்றால்
தங்களின் அன்பான    என  முடித்திட  வேண்டும்.


வேறு  வெளியாட்களாக  இருப்பின்  தங்களின் உண்மையான   என நிறைவு செய்திட  வேண்டும்.


எந்த ஒரு கடிதத்திலும்   மேற் சொன்ன ஏழு 
அம்சங்களும்  கண்டிப்பாக  இருந்திட வேண்டும்.  

*********************************************************************************

கடிதம் 1   தற்செயல்  விடுப்பு  கேட்டு  அலுவலகத்திற்கு  கடிதம்


விடுநர் 
                கே.சுப்பிரமணி,
                சார் பணியாளர், 
                சம்பள வரிசை  எண்  456745
               எல்.ஐ.சி ஆப்  இந்தியா,
               வாணியம்பாடி  கிளை.
                 
பெறுனர் 
             கிளை மேலாளர்,
              எல்.ஐ.சி ஆப்  இந்தியா,
             வாணியம்பாடி  கிளை.

மதிப்பிற்குரிய  ஐயா, 

                                                            பொருள் :  விடுப்புக் கடிதம்.

நெருங்கிய  உறவினர்  ஒருவரது  திருமணம்  வரும்  16 .06 .2011  அன்று  
வேலூரில்  நடைபெறவுள்ளது. நான்  அத்திருமணத்திற்கு  அவசியம்  
செல்ல வேண்டியுள்ளதால்     16 .06 .2011  அன்று  ஒரு நாள் மட்டும் 
தற்செயல்  விடுப்பு  அளிக்குமாறு  கேட்டுக்கொள்கிறேன்.  
                                                                  நன்றி  

இடம் : வாணியம்பாடி                                                      தங்களின் உண்மையான

நாள் : 15 .06 .2011                                                                         (கே.சுப்பிரமணி)

**********************************************************************************

கடிதம் 2   மருத்துவ   விடுப்பு  கேட்டு  பள்ளிக்கு   கடிதம்



விடுநர் 
                தா.தங்கவேலு ,
                ம/பெ த.சுப்பிரமணி          
                
பெறுனர் 
                 தலைமை ஆசிரியர் 
                 அரசு மேல்நிலைப் பள்ளி 
                 சத்துவாச்சாரி 



மதிப்பிற்குரிய  ஐயா, 

                                                            பொருள் :  மருத்துவ  விடுப்புக் கடிதம்.

                         எட்டாம் வகுப்பு பி பிரிவில் படித்து வரும் என் மகன் த. சுப்ரமணிக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல். மருத்துவர் அவனுக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதால் அவனக்கு கட்டாயமாக ஓய்வு தேவை என்றுள்ளார். எனவே அவன் ஆறு மற்றும் ஏழாம் தேதி அவனுக்கு விடுமுறை  அளிக்கும்  படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 



                                                                              நன்றி  

இடம: வேலூர்                                                                    தங்களின் உண்மையான

நாள் : 06 .06 .2011                                                                         (த.தங்கவேலு)

 *********************************************************************************

கடிதம் 3: தெரு விளக்கு எரியவில்லை என்று நகராட்சிக்கு கடிதம்  
 

விடுநர்
                கே.பாஸ்கர்
                 1 /2  திருநகர் 
                 வேலூர்
பெறுனர்
                 ஆணையாளர் 
                  வேலூர்  மாநகராட்சி
மதிப்பிற்குரிய ஐயா,
 
                                       பொருள் :விளக்கு எரியவில்லை என்று நகராட்சிக்கு கடிதம்.
                            என் பெயர் கே.பாஸ்கர். நன் வேலுரின் திருநகரில் வசித்து வருகிறேன். எங்கள் தெருவில் கடந்த இரண்டு வாரங்களாக தெரு விளக்கு எரியவில்லை. இதனால் பொது மக்கள் மிகவும் அல்லல் படுகிறார்கள். மாலை மற்றும் இரவு நேரங்களில் பாதையில் செல்வது மிகவும் கடினமாக உள்ளது. எதிரில் வாகனங்கள் வருவதை எளிதில் காண முடியவில்லை. எனவே விரைவில் தெரு விளக்கை சரி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
                                                             நன்றி 



இடம: வேலூர்                                                                    தங்களின் உண்மையான

நாள் : 06 .06 .2011                                                                         (கே.பாஸ்கர்)

 *********************************************************************************
கடிதம் 4: பள்ளிச் சான்றிதழ் கேட்டு   தலைமை ஆசிரியருக்கு கடிதம்

விடுநர் :
                ச.சரண்
                பத்தாம் வகுப்பு 
                அரசு மேல்நிலை பள்ளி 
பெறுனர் 
                 தலைமை ஆசிரியர் 
                  அரசு மேல்நிலை பள்ளி
மதிப்பிற்குரிய ஐயா :
                                                  பொருள்: பள்ளிச் சான்றிதழ் கேட்டு தலைமை ஆசிரியருக்கு கடிதம்.


                                            என் பெயர் ச.சரண். நன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன் . என் தந்தைக்கு பணியில் இடம் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் நான் இப்பள்ளியை விட்டு நீங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே எனது பள்ளிச் சான்றிதழை அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
                                                                              நன்றி


இடம: வேலூர்                                                                    தங்களின் உண்மையான

நாள் : 06 .06 .2011                                                                         (கே.பாஸ்கர்)
**********************************************************************************
கடிதம் 5 : நீங்கள் சென்ற இடம் பற்றி நண்பனுக்கு கடிதம் 

                                                                                                                            ல .கந்தசாமி 
                                                                                                                            வேலூர்
                                                                                                                            06 .06 .2011  
அன்புள்ள  ராகேஷ் ,   
                                           நலம் நலமறிய ஆவல். கந்தசாமி எழுதுவது. நான் சென்ற வாரம் என் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட கன்னியாகுமரி சென்றேன். நான் சென்ற ஊர்களுள் இதுவே என்னை மிகவும் கவர்ந்தது.இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகிய மூன்று கடல்களும் சங்கமிக்கும் இடம்.  இந்தியாவின் தெற்கு பகுதியான இவ்விடத்தில் சூரியன் உதயம் ஆகும் போது இரு கண்களுக்கும் விருந்து போல் இருக்கும். கடற்கரை எல்லாம் அவ்வளவு அழகு. அங்குள்ள திருவள்ளுவர் சிலை மிகவும் தத்ரூபமாக செதுக்கி உள்ளதன் மூலம் தமிழனின் திறமை புலனாகிறது. விவேகானந்தர் நினைவு மண்டபம், காந்தி மண்டபம் போன்றவையும் என்னை கவர்ந்தன. நான் மிகவும் மன திருப்தியுடன் ஊர் திரும்பினேன். நீயும் ஒரு முறை அங்கு சென்று வா. ஒரு நாள் வீட்டுற்கு அவசியம் வர வேண்டும். 
                          இப்படிக்கு உன் பதில் கடிதத்தை ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கும் ஆருயிர் நண்பன் 
                                                                                                                          ல.கந்தசாமி 
**********************************************************************************

Monday, June 6, 2011

மாதிரி வினாத்தாள் 2



1 . கட்டுரை- அளிக்கப்படும் தலைப்புகளில்  ( 10 வரிகளுக்கு மேற்படாமல்)


வினாத்தாளில் தரப்படுகிற நான்கு அல்லது ஐந்து தலைப்புகளில்  ஒன்றின் மீது  தேர்வெழுதுபவர் கட்டுரைக்கவேண்டும்.


i ) எனக்குப் பிடித்த விளையாட்டு
ii ) மழைக் காலம்
iii ) தீபாவளி 
iv ) ஒரு ரயில் பயணம்
v ) உலகக் கோப்பை


2 . கடிதம் / விண்ணப்பம் எழுதுதல் : கடிதம் அல்லது விண்ணப்பத்தின் வடிவமைப்பிற்கும்   மதிப்பெண்கள் வழங்கப்படும்.


உதாரணங்கள் -
i ) அப்பாவுக்கு பணம் அனுப்பச் சொல்லி கடிதம் 
2 ) விடுப்பு வேண்டி விண்ணப்பம்
3 ) விடுமுறைக்கு வருமாறு அழைப்பு விடுத்து நண்பனுக்கு கடிதம்


மேலே தரப்பட்டுள்ள கட்டுரை/கடிதம்/விண்ணப்பம் ஆகியவற்றிற்கான  தலைப்புகள் மாதிரி தன்மை கொண்டவையே ஆகும்.


3 . குறிப்பிட்ட பத்தியில் இருந்து  எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடையளி


4 . எல்..சி கட்டமைப்பு -
( . ம் ) அரசுடைமை , மைய/மண்டல/கோட்ட/கிளை/சாட்டிலைட் அலுவலகங்கள்,
மைய/மண்டல அலுவலகங்கள் அமைந்துள்ள நகரங்கள், மண்டல/கோட்ட/கிளை மேலாளர்கள்.


எல்..சி யில் எத்தனை மண்டலங்கள் உள்ளன?
யார் உங்களுடைய மண்டல மேலாளர்?
உங்கள் மண்டலத்தின் தலைமை அலுவலகம் உள்ள நகரம் எது?
எல்..சி யின் மைய அலுவலகம் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?


5 . எல்..சி யின் பணிகள் - ( .ம் ) பாலிசி எண்களை ஏறு / இறங்கு முகமாய்  வரிசைப்   படுத்து, எல்..சி யின் பல்வேறு துறைகள், பல்வேறு துறைகளின் பணிகள்கேஷ் கவுன்டரின் வேலை நேரம், பிரிமிய சேகரிப்பு மையங்கள், சப் ஸ்டாப்(பியூன்) கடமைகள், சப் ஸ்டாப் (பியூன்) மற்றும் இத்தகைய கேள்விகள்.


6 . பொது அறிவு & நடப்பு நிகழ்வுகள் பற்றியவை
(.ம்) தமிழ் நாளிதழ்களின் பெயர்கள் , பிரதமர்( தலைமை அமைச்சர்), ஜனாதிபதி ( குடியரசுத் தலைவர்),  ஆளுநர் ( கவர்னர்), தேசிய விடுமுறை நாட்கள், தனியார் இன்சூரன்ஸ்/ வங்கிகளின் பெயர்கள்,
உலகக் கோப்பை, .பி.எல் மற்றும் இத்தகையவை.


7 . எளிமையான கணக்குகள்-
( .ம்) i ) கேஷ் கவுன்டரில் ஒரு பாலிசிதாரர் ரூ 4500 செலுத்துகிறார். அவரது பாலிசி பிரிமியம் ரூ 4350    ம்  தாமதக் கட்டணம் ரூ 130 எனில் கேசியர் மீதத் தொகையாக எவ்வளவை  பாலிசிதாரருக்கு
தரவேண்டும்

           ii ) ஒரு பேனா ரூ 20 விலைக்கு கிடைக்கிறது எனில் ரூ 140 க்கு எத்தனை பேனாக்கள் கிடைக்கும்?


8 . கையெழுத்து நன்கு அமைந்தால் அதற்கு 5 மதிப்பெண்கள் .

வெற்றியை நோக்கி



சார் பணியாளர் தேர்விற்கான
மாதிரி வினாத்தாள்  1

1 ) பத்து வரிகளுக்கு மிகாமல் கீழ்க்காணும்  தலைப்புக்கள் ஏதேனும் ஒன்று பற்றி கட்டுரை எழுதுக.

பொங்கல் பண்டிகை
இந்திய சுதந்திரப் போராட்டம்
எல்.ஐ.சி நிறுவனத்தின்  சாதனைகள்
உங்கள் ஊருக்கு அருகாமையில்  உள்ள சுற்றுலா தளம்
நான் விரும்பும்  தலைவர்.

2 )  கடிதம்  அல்லது மனு எழுதுதல்

நீங்கள் சமீபத்தில் சென்ற இடம் பற்றி நண்பனுக்கு கடிதம்.
பள்ளிச்சான்றிதழ்  கேட்டு  தலைமையாசிரியருக்கு கடிதம்
தெரு  விளக்கு எரியவில்லை  என்று நகராட்சிக்கு கடிதம்

(கடிதத்தின்  அமைப்பு  எப்படி  உள்ளது  என்பதும்  முக்கியமாக
பார்க்க முடியும்)

3 ) பின் வரும் பத்தியை  கவனமாக படிக்கவும்

முருகன் வேகமாக சாலையை கடக்கும் போது  குறுக்கே  வந்த சைக்கிள் அவன் மீது மோதியது. சைக்கிளில் வந்த கந்தனும்
முருகனும் கீழே  விழுந்தார்கள்.  வீதியோரம் போய்க் கொண்டிருந்த
அப்துல்லா  இருவரையும் தூக்கி விட்டான். அங்கே மளிகைக் கடை
வைத்திருந்த ராஜன் சாலையில் செல்லும்போது கவனமாக
இருக்ககூடாதா என்று கடிந்து கொண்டார்.

கேள்விகள்

முருகன் என்ன செய்தான்?

சைக்கிளில் வந்தது யார்?

இவர்களுக்கு இடையே என்ன நடந்தது?

உதவி செய்தது யார்?

ராஜன் என்ன செய்கிறார்?

அவர்  என்ன கூறினார்?

4 )   எல்.ஐ.சி யின் அமைப்பு மற்றும் பணிகள் குறித்த கேள்விகள்

உங்கள் கோட்டத்தில்  எத்தனை கிளைகள் உள்ளது?
உங்கள் மண்டலத்தில்  எத்தனை கோட்டங்கள்  உள்ளது?
உங்கள் மாநிலத்தில்  எத்தனை கோட்டங்கள் உள்ளது?
உங்கள் கோட்டத்தின்  தலைமையகம் எங்கே உள்ளது?
உங்களின் கோட்ட  மேலாளர் பெயர் என்ன?
எல்.ஐ.சி புதிதாய் அறிமுகம் செய்துள்ள பாலிசியின் பெயர் என்ன?
யூலிப்  திட்டம்  என்றால் என்ன?

5 )  கீழ்க்கண்ட பாலிசி எண்களை  ஏறு வரிசையில் அமைத்திடு

779834568     568412084    874560871    779312094   778643218

965735198    773994021    776882134     679235480   976768219


6 )   பொது அறிவுக் கேள்விகள்

இந்தியாவின்  சுதந்திர தினம்
இந்தியாவின் குடியரசு தினம்
எல்.ஐ.சி உருவான நாள்
மகாத்மா காந்தி பிறந்த நாள்
இந்தியாவின்  மிக இளைய பிரதமர்
இந்தியாவின் முதல் பெண் பிரதமர்
இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர்
எல்.ஐ.சி தோன்றும் முன் எத்தனை தனியார் கம்பெனிகள்
இருந்தன?
இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை  எத்தனை முறை
வென்றுள்ளது?
இந்தியாவின் தேசிய விளையாட்டு என்ன?
கடைசியாக நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை
பதக்கங்களை  வென்றுள்ளது?

7 )  கணிதம்

பாலிசிதாரருக்கு அனுப்ப வேண்டிய ஒரு கடிதத்திற்கு எட்டு ரூபாய்
மதிப்பில் தபால் வில்லை ஓட்ட வேண்டும்.  90  கடிதங்கள் அனுப்ப
வேண்டும் என்றால்  மொத்தம் எத்தனை ரூபாய்க்கு தபால் வில்லைகள்   வாங்க வேண்டும்?

ஒரு பாலிசிதாரர்  தான் வாங்கிய கடன் தொகை, வட்டி, பிரிமியம் 
ஆகியவற்றை  செலுத்த அலுவலகம்  வருகின்றார்.  கடன் ரூபாய் 6 ,000  
வட்டி 752  ரூபாய். பிரிமியம் ரூபாய் 1245 . என்றால்  அவர்  மொத்தமாக
எவ்வளவு ரூபாய் செலுத்துவார்? 

கையெழுத்து  சிறப்பாக இருந்தால்  அதற்கு கூடுதலாக ஐந்து மதிப்பெண் 
தரப்படும் என்பதை  கவனத்தில் கொண்டு பயிற்சி  செய்யவும். 

வாழ்த்துக்களுடன்

காப்பீட்டுக் கழக  ஊழியர்  சங்கம், 
வேலூர் கோட்டம். 


இதற்கான பதில்கள்  நாளை  வெளியிடப்படும்