Sunday, June 12, 2011

மாதிரி கடிதங்கள்

மாதிரி  கடிதங்கள் 

கடிதம்  எழுதும் போது  கவனத்தில்  கொள்ள வேண்டியது.


1 ) அனுப்புனர்  அல்லது  விடுநர்  பெயர், முகவரி குறிப்பிட வேண்டும். 

2 ) பெறுனர் பெயர், முகவரி குறிப்பிட வேண்டும்.

3 ) யாருக்கு கடிதம் அனுப்பப்படுகின்றது  என்பதைப்பொருத்து  
எப்படி  அழைப்பது  என்று  முடிவு செய்து  எழுத  வேண்டும்.


தலைமை ஆசிரியர்,  மேலதிகாரி,  அரசு  அதிகாரி  என்றால்  மதிப்பிற்குரிய  ஐயா  என  அழைக்க வேண்டும்.


பெற்றோர், உறவினர், சகோதரன், சகோதரி, நண்பன் என்றால்
அன்புள்ள   என  அழைக்க வேண்டும்.


வேறு  வெளியாட்களாக  இருப்பின்  அன்புடையீர்  என அழைக்க வேண்டும்.

4 )  கடிதத்தின்  பொருள்  என்ன என்பதை  எழுத வேண்டும்.

5 ) உள்ளடக்கம் -  நாம்  என்ன  சொல்ல  விரும்புகிறோமோ, அதை  
சுருக்கமாக  எழுதிட வேண்டும். 


6 )  இறுதியில்   ஊர், நாள்  ஆகியவற்றை  கடிதத்தின்  வலது  மூலையில்
எழுதிட வேண்டும்.

7 )  இடது மூலையில்  யாருக்கு  கடிதம்  அனுப்பியுள்ளோம்  என்பதைப் 
பொறுத்து  தங்களின் பணிவான, அன்பான, உண்மையான  என்று  
எழுதிட வேண்டும். 


தலைமை ஆசிரியர்,  மேலதிகாரி,  அரசு  அதிகாரி  என்றால்  தங்களின் பணிவான   என  நிறைவு செய்திட  வேண்டும்.


பெற்றோர், உறவினர், சகோதரன், சகோதரி, நண்பன் என்றால்
தங்களின் அன்பான    என  முடித்திட  வேண்டும்.


வேறு  வெளியாட்களாக  இருப்பின்  தங்களின் உண்மையான   என நிறைவு செய்திட  வேண்டும்.


எந்த ஒரு கடிதத்திலும்   மேற் சொன்ன ஏழு 
அம்சங்களும்  கண்டிப்பாக  இருந்திட வேண்டும்.  

*********************************************************************************

கடிதம் 1   தற்செயல்  விடுப்பு  கேட்டு  அலுவலகத்திற்கு  கடிதம்


விடுநர் 
                கே.சுப்பிரமணி,
                சார் பணியாளர், 
                சம்பள வரிசை  எண்  456745
               எல்.ஐ.சி ஆப்  இந்தியா,
               வாணியம்பாடி  கிளை.
                 
பெறுனர் 
             கிளை மேலாளர்,
              எல்.ஐ.சி ஆப்  இந்தியா,
             வாணியம்பாடி  கிளை.

மதிப்பிற்குரிய  ஐயா, 

                                                            பொருள் :  விடுப்புக் கடிதம்.

நெருங்கிய  உறவினர்  ஒருவரது  திருமணம்  வரும்  16 .06 .2011  அன்று  
வேலூரில்  நடைபெறவுள்ளது. நான்  அத்திருமணத்திற்கு  அவசியம்  
செல்ல வேண்டியுள்ளதால்     16 .06 .2011  அன்று  ஒரு நாள் மட்டும் 
தற்செயல்  விடுப்பு  அளிக்குமாறு  கேட்டுக்கொள்கிறேன்.  
                                                                  நன்றி  

இடம் : வாணியம்பாடி                                                      தங்களின் உண்மையான

நாள் : 15 .06 .2011                                                                         (கே.சுப்பிரமணி)

**********************************************************************************

கடிதம் 2   மருத்துவ   விடுப்பு  கேட்டு  பள்ளிக்கு   கடிதம்



விடுநர் 
                தா.தங்கவேலு ,
                ம/பெ த.சுப்பிரமணி          
                
பெறுனர் 
                 தலைமை ஆசிரியர் 
                 அரசு மேல்நிலைப் பள்ளி 
                 சத்துவாச்சாரி 



மதிப்பிற்குரிய  ஐயா, 

                                                            பொருள் :  மருத்துவ  விடுப்புக் கடிதம்.

                         எட்டாம் வகுப்பு பி பிரிவில் படித்து வரும் என் மகன் த. சுப்ரமணிக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல். மருத்துவர் அவனுக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதால் அவனக்கு கட்டாயமாக ஓய்வு தேவை என்றுள்ளார். எனவே அவன் ஆறு மற்றும் ஏழாம் தேதி அவனுக்கு விடுமுறை  அளிக்கும்  படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 



                                                                              நன்றி  

இடம: வேலூர்                                                                    தங்களின் உண்மையான

நாள் : 06 .06 .2011                                                                         (த.தங்கவேலு)

 *********************************************************************************

கடிதம் 3: தெரு விளக்கு எரியவில்லை என்று நகராட்சிக்கு கடிதம்  
 

விடுநர்
                கே.பாஸ்கர்
                 1 /2  திருநகர் 
                 வேலூர்
பெறுனர்
                 ஆணையாளர் 
                  வேலூர்  மாநகராட்சி
மதிப்பிற்குரிய ஐயா,
 
                                       பொருள் :விளக்கு எரியவில்லை என்று நகராட்சிக்கு கடிதம்.
                            என் பெயர் கே.பாஸ்கர். நன் வேலுரின் திருநகரில் வசித்து வருகிறேன். எங்கள் தெருவில் கடந்த இரண்டு வாரங்களாக தெரு விளக்கு எரியவில்லை. இதனால் பொது மக்கள் மிகவும் அல்லல் படுகிறார்கள். மாலை மற்றும் இரவு நேரங்களில் பாதையில் செல்வது மிகவும் கடினமாக உள்ளது. எதிரில் வாகனங்கள் வருவதை எளிதில் காண முடியவில்லை. எனவே விரைவில் தெரு விளக்கை சரி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
                                                             நன்றி 



இடம: வேலூர்                                                                    தங்களின் உண்மையான

நாள் : 06 .06 .2011                                                                         (கே.பாஸ்கர்)

 *********************************************************************************
கடிதம் 4: பள்ளிச் சான்றிதழ் கேட்டு   தலைமை ஆசிரியருக்கு கடிதம்

விடுநர் :
                ச.சரண்
                பத்தாம் வகுப்பு 
                அரசு மேல்நிலை பள்ளி 
பெறுனர் 
                 தலைமை ஆசிரியர் 
                  அரசு மேல்நிலை பள்ளி
மதிப்பிற்குரிய ஐயா :
                                                  பொருள்: பள்ளிச் சான்றிதழ் கேட்டு தலைமை ஆசிரியருக்கு கடிதம்.


                                            என் பெயர் ச.சரண். நன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன் . என் தந்தைக்கு பணியில் இடம் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் நான் இப்பள்ளியை விட்டு நீங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே எனது பள்ளிச் சான்றிதழை அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
                                                                              நன்றி


இடம: வேலூர்                                                                    தங்களின் உண்மையான

நாள் : 06 .06 .2011                                                                         (கே.பாஸ்கர்)
**********************************************************************************
கடிதம் 5 : நீங்கள் சென்ற இடம் பற்றி நண்பனுக்கு கடிதம் 

                                                                                                                            ல .கந்தசாமி 
                                                                                                                            வேலூர்
                                                                                                                            06 .06 .2011  
அன்புள்ள  ராகேஷ் ,   
                                           நலம் நலமறிய ஆவல். கந்தசாமி எழுதுவது. நான் சென்ற வாரம் என் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட கன்னியாகுமரி சென்றேன். நான் சென்ற ஊர்களுள் இதுவே என்னை மிகவும் கவர்ந்தது.இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகிய மூன்று கடல்களும் சங்கமிக்கும் இடம்.  இந்தியாவின் தெற்கு பகுதியான இவ்விடத்தில் சூரியன் உதயம் ஆகும் போது இரு கண்களுக்கும் விருந்து போல் இருக்கும். கடற்கரை எல்லாம் அவ்வளவு அழகு. அங்குள்ள திருவள்ளுவர் சிலை மிகவும் தத்ரூபமாக செதுக்கி உள்ளதன் மூலம் தமிழனின் திறமை புலனாகிறது. விவேகானந்தர் நினைவு மண்டபம், காந்தி மண்டபம் போன்றவையும் என்னை கவர்ந்தன. நான் மிகவும் மன திருப்தியுடன் ஊர் திரும்பினேன். நீயும் ஒரு முறை அங்கு சென்று வா. ஒரு நாள் வீட்டுற்கு அவசியம் வர வேண்டும். 
                          இப்படிக்கு உன் பதில் கடிதத்தை ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கும் ஆருயிர் நண்பன் 
                                                                                                                          ல.கந்தசாமி 
**********************************************************************************

1 comment:

Unknown said...

nice!
it was use full!!!!!!!!!!!!!!