1 . கட்டுரை- அளிக்கப்படும் தலைப்புகளில் ( 10 வரிகளுக்கு மேற்படாமல்)
வினாத்தாளில் தரப்படுகிற நான்கு அல்லது ஐந்து தலைப்புகளில் ஒன்றின் மீது தேர்வெழுதுபவர் கட்டுரைக்கவேண்டும்.
i ) எனக்குப் பிடித்த விளையாட்டு
ii ) மழைக் காலம்
iii ) தீபாவளி
iv ) ஒரு ரயில் பயணம்
v ) உலகக் கோப்பை
2 . கடிதம் / விண்ணப்பம் எழுதுதல் : கடிதம் அல்லது விண்ணப்பத்தின் வடிவமைப்பிற்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
உதாரணங்கள் -
i ) அப்பாவுக்கு பணம் அனுப்பச் சொல்லி கடிதம்
2 ) விடுப்பு வேண்டி விண்ணப்பம்
3 ) விடுமுறைக்கு வருமாறு அழைப்பு விடுத்து நண்பனுக்கு கடிதம்
மேலே தரப்பட்டுள்ள கட்டுரை/கடிதம்/விண்ணப்பம் ஆகியவற்றிற்கான தலைப்புகள் மாதிரி தன்மை கொண்டவையே ஆகும்.
3 . குறிப்பிட்ட பத்தியில் இருந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடையளி
4 . எல்.ஐ.சி கட்டமைப்பு -
( உ . ம் ) அரசுடைமை , மைய/மண்டல/கோட்ட/கிளை/சாட்டிலைட் அலுவலகங்கள்,
மைய/மண்டல அலுவலகங்கள் அமைந்துள்ள நகரங்கள், மண்டல/கோட்ட/கிளை மேலாளர்கள்.
எல்.ஐ.சி யில் எத்தனை மண்டலங்கள் உள்ளன?
யார் உங்களுடைய மண்டல மேலாளர்?
உங்கள் மண்டலத்தின் தலைமை அலுவலகம் உள்ள நகரம் எது?
எல்.ஐ.சி யின் மைய அலுவலகம் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?
5 . எல்.ஐ.சி யின் பணிகள் - ( உ.ம் ) பாலிசி எண்களை ஏறு / இறங்கு முகமாய் வரிசைப் படுத்து, எல்.ஐ.சி யின் பல்வேறு துறைகள், பல்வேறு துறைகளின் பணிகள், கேஷ் கவுன்டரின் வேலை நேரம், பிரிமிய சேகரிப்பு மையங்கள், சப் ஸ்டாப்(பியூன்) கடமைகள், சப் ஸ்டாப் (பியூன்) மற்றும் இத்தகைய கேள்விகள்.
6 . பொது அறிவு & நடப்பு நிகழ்வுகள் பற்றியவை
(உ .ம்) தமிழ் நாளிதழ்களின் பெயர்கள் , பிரதமர்( தலைமை அமைச்சர்), ஜனாதிபதி ( குடியரசுத் தலைவர்), ஆளுநர் ( கவர்னர்), தேசிய விடுமுறை நாட்கள், தனியார் இன்சூரன்ஸ்/ வங்கிகளின் பெயர்கள்,
உலகக் கோப்பை, ஐ.பி.எல் மற்றும் இத்தகையவை.
7 . எளிமையான கணக்குகள்-
( உ.ம்) i ) கேஷ் கவுன்டரில் ஒரு பாலிசிதாரர் ரூ 4500 செலுத்துகிறார். அவரது பாலிசி பிரிமியம் ரூ 4350 ம் தாமதக் கட்டணம் ரூ 130 எனில் கேசியர் மீதத் தொகையாக எவ்வளவை பாலிசிதாரருக்கு
தரவேண்டும்?
ii ) ஒரு பேனா ரூ 20 விலைக்கு கிடைக்கிறது எனில் ரூ 140 க்கு எத்தனை பேனாக்கள் கிடைக்கும்?
8 . கையெழுத்து நன்கு அமைந்தால் அதற்கு 5 மதிப்பெண்கள் .
No comments:
Post a Comment