Tuesday, August 30, 2011

நான்காம் பிரிவு ஊழியர் பணி நியமனம் - அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான சாதனை



-தோழர் கே.வேணுகோபால்,
பொதுச்செயலாளர், ....

அனைத்தும் துவங்கியது ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் கோட்டங்களின் தற்காலிக ஊழியர்கள் தொடுத்த ரிட் மனுவின் மூலமாகத்தான். 17.06.1996 அன்று எல்..சி நிர்வாகம் ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் கோட்டங்களுக்காக 400 சார்பணியாளர் பணியிடங்களுக்கான( அப்போது இருந்த 200 காலியிடங்களுக்காக பணி நியமன அறிவிப்பை வெளியிட்டது. அதே நேரம் அங்கே பணியாற்றி வந்த தற்காலிக ஊழியர்களின் பணிக்காலம் ஆறாண்டுகள்
முதல் ஒன்பதாண்டுகள் வரை முடிந்திருந்தது. 1993 க்கு முன்பிருந்தே பணி
செய்து வந்த ஊழியர்களுக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கக்கூட எல்..சி நிர்வாகம் மறுத்து விட்டது. 1993 க்குப் பிறகுதான் தனது திட்டம் பொருந்தும் என கூறி விட்டது.

எல்..சி யில் தங்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கை நிராசையான சூழலில் அவர்கள் ஹைதராபாத்தில் நமது மண்டல அமைப்பை சந்தித்து முறையிட்டனர். நமது தென் மத்திய மண்டலக் கூட்டமைப்பு அவர்கள் பிரச்சினையை கையிலெடுத்து மண்டல நிர்வாகத்துடன் விவாதித்தது. 85 நாட்களோ, ஆறு வருடங்களுக்கு மேலோ, எந்த ஒரு தற்காலிக ஊழியராக இருந்தாலும் அவர்களுக்கு (.பிரபாவதி எதிர் எல்..சி ஆஃப் இந்தியா வழக்கின் அடிப்படையில் உருவான) திட்டம் மட்டுமே பொருந்தும், நீண்ட நாட்களாக பணியாற்றுபவர்கள் என்பதற்க்காக தனியான திட்டம் எதுவும் கொண்டு வர முடியாது என மத்திய அலுவலகம் மறுத்து விட்டதாக மண்டல நிர்வாகம் தனது இயலாமையை தெரிவித்தது.

விளம்பரத்தின் படி தேர்வுகள் நடந்து இந்த தற்காலிக ஊழியர்களை பணியிலிருந்து வெளியேற்றும் தருணத்தில் தென் மத்திய மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பும் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் கோட்டச் சங்கங்கள், இந்த ஊழியர்களை நீதிமன்றம் வாயிலாக தீர்வு பெறுவதே சரியாக இருக்கும் என வழி காட்டியது. அதன்படி அவர்கள் ஆந்திரப்பிரதேச உயர்நீதி மன்றத்தை அணுகினார்கள்.

பின்னர் அவர்களின் மனுவை ஏற்றுக்கொண்ட ஆந்திரப்பிரதேச உயர்நீதி மன்ற  பெஞ்ச் பின் வரும் தீர்ப்பை வழங்கியது.

" தகுதி வாய்ந்த புதிய ஊழியரை விட அனுபவமிக்க ஒரு ஊழியரே ஒரு நிறுவனத்திற்கு மிக்க பயனுள்ளவராய் இருப்பார் என்பது மிகவும் தெளிவாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.ஆகவே இந்த ஊழியர்களை எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வுக்கு உட்படுத்தியே அவர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்க முடியும் என்று எல்..சி யின் மூத்த வழக்கறிஞர் சொல்வதை ஏற்கவில்லை.ஆனாலும் எல்..சி யால் மனுதாரர்களுக்கென பிரத்யேகமான ஒரு திட்டத்தை உருவாக்கி அதன்படி இவர்களை பரிசீலனை செய்யலாம் என கூறியதை வரவேற்கிறோம். அதன்படி எல்..சி இவர்களுக்கென ஒரு திட்டத்தை வடிவமைத்து அதன்படி இவர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என தீர்ப்பளிக்கிறோம்"

ஆனால் எல்..சி மத்திய அலுவலகம் துரதிர்ஷ்டவசமாக அப்படி எந்த ஒருதிட்டத்தையும் உருவாக்க மறுத்து மேல்முறையீடு செய்ய முடிவெடுத்தது.

எல்..சி உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்தது (சிவில் வழக்கு எண் 2104 /2000) . .பிரபாவதி எதிர் எல்..சி ஆப் இந்தியா வழக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விதிகள் படி இந்த ஊழியர்களுக்கு வாய்ப்பளிக்கப்ப டவில்லையென்றால் அதன்படி அவர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று 22.11.2001 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை முறையாக அமுலாக்க வேண்டும் என்று கோரி ஹைதராபாத் தற்காலிக ஊழியர்கள் மீண்டும் ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றம்  சென்றனர். ரிட் மனு 4819/2002 ஆன இவ்வழக்கினை விசாரித்த உய்ர் நீதிமன்றம் தற்காலிக ஊழியர்களுக்கும் ஹைதராபாத்தில் பணி நியமனத்தில் வெளிச்சந்தையில் இருந்து பங்கேற்றவர்களுக்கும் தீர்வு அளிக்கிற தீர்ப்பினை அளித்தது.

எல்..சி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. வழக்கினை விசாரித்த நீதியரசர்கள் 15 வருடத்திற்கு மேல் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களால் புதிதாக படித்து விட்டு வருபவர்களோடு எழுத்துத் தேர்வில் போட்டியிட முடியாது என்று குறிப்பிட்டார்கள். 8,டிசம்பர் 2011 அன்று வழக்கு விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்..சி இனியும் தாமதிக்கக்கூடாது, எதேனும் ஒரு ஏற்பாடு வேண்டும் என கடுமையாக கூறியது.

புது டெல்லியில் நடைபெற்ற ஏ....ஏ மாநாட்டின் போது இந்த வழக்கின் நிலவரங்கள் தெரிவிக்கப்பட்டது. எல்..சி ஒரு திட்டத்தை அறிமுகம் செய்ய உடன்பட்டால் இம்மனுவின் மூலமே நாடெங்கிலும் உள்ள தற்காலிக ஊழியர்களுக்கு ஒரு தீர்வை உருவாக்க முடியும் என மாநாடு கருதியது. ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் ஊழியர்களுக்கென மட்டும் ஒரு தீர்வு ஏற்பட்டால் அது 18 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு மட்டுமே பலனளிக்கும் என்பதையும் ஏ....ஏ தெளிவாக அறிந்திருந்தது. எனவே நாடு முழுதும் உள்ள தற்காலிக ஊழியர்கள் பலனடையக்கூடிய விதத்தில் ஒரு திட்டம் அமைய வேண்டும் என்பதற்கான முயற்சிகளை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மேற்கொண்டது.. ....ஏ தொடர்ச்சியாக இந்த அடிப்படையில் நிர்வாகத்துடன் ப ேசி வந்தது.
உச்ச நீதிமன்றம் முன்பாக ஒரு திட்டத்தை வழங்குமாறு ஆலோசனை கூறியது.

ந்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தற்காலிக ஊழியர்களிக்கிற வகையில் ஒரு பிரமாண வாக்குமூலத்தை எல்..சி நிர்வாகம் இறுதியாக சமர்ப்பித்தது. ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் கோட்டங்களைப் பொறுத்தவரை வெளிச்சந்தையிலிருந்து முன்னரே தேர்வு எழுதி நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டவர்களையும் தற்போதைய நேர்முகத் தேர்விற்கு  அழைக்கவும் வழிவகை செய்யப்பட்டது. பிரமாண வாக்குமூலத்தின் அம்சங்களை உள்ளடக்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆறு மாதங்களுக்குள்ளாக இத்தீர்ப்பை அமுலாக்க வேண்டும் என்றும் கூறியது.

நீதிமன்ற தீர்ப்பை அமுலாக்கும் முன்னர் பல்வேறு சிக்கல்களுக்கு விடை காண வேண்டிய அவசியம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு ஏற்பட்டது. தற்காலிக ஊழியராக நான்காம் பிரிவு பணிகளான சார் பணியாளர், கேர் டேக்கர், எலக்ட்ரிஷியன், ப்ளம்பர், லிப்ட்மேன், துப்புரவாளர் என பல்வேறு பணியாற்றி வருபவர்களை உள்ளடக்க எல்..சி நிர்வாகத்துடன் பேச வேண்டியிருந்தது. உச்ச நீதி மன்ற தீர்ப்பின் உணர்வை அப்படியே அமுலாக்க பாடத்திட்டம் எவ்வாறு அமைய வேண்டும் என விவாதிக்க வேண்டியிருந்தது.
எளிமையான முறையில் எழுத்துத்தேர்வு அமைய வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது.

தற்போது எழுத்துத்தேர்வுகளும் நேர்முகத்தேர்வுகளும் அனைத்துக் கோட்டங்களிலும் நடந்து முடிந்து விட்டது. அசன்சால் கோட்டத்தில் மட்டும் சில சீர்குலைவு சக்திகள் எழுத்துத் தேர்வு நடைபெறுவதை அனுமதிக்கவில்லை. அங்கேயுள்ள தற்காலிக ஊழியர்களுக்கும்
எழுத்துத்தேர்வு நடைபெற வேண்டும் என்பதை மத்திய அலுவலகத்திடம் ஏ....ஏ வற்புறுத்தி வருகின்றது. நாம் தற்போது முடிவுகளை எதிர்நோக்கியுள்ளோம்.

இதற்கிடையில் பல்வேறு அமைப்புக்கள் எழுத்துத்த ேர்வையும் நேர்முகத்தேர்வையும் நடைபெறாமல் தடுக்க விரும்பின. பல முயற்சிகளை மேற்கொண்டன.. தின ஊதிய ஊழியர்கள் எழுத்துத்தேர்வில் பங்கேற்பதை எதிர்த்து தென் மண்டல எல்..சி எஸ்.சி/எஸ்.டி ஊழியர்கள் நலச்சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. உச்ச நீதிமன்றம் அவர்களின் வாதங்களை ஏற்க மறுத்தது. எனவே அவர்கள் தங்கள் மனுவை திரும்பப்
பெற வேண்டியிருந்தது. அதன் பின்னும் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.

கேரளாவில் ஐ.என்.டி.யு.சி சங்கம் எழுத்துத்தேர்வில் பங்கேற்ற அனைவரும் தகுதி இல்லாதவர்கள் என்றொரு வழக்கை நீதிமன்றத்தில் பதிவு செய்தது. நீதிமன்ற வழக்குகள் முடிந்ததுமே அனைத்து ஊழியர்களையும் பணியமர்த்துவதற்கான இறுதி உத்தரவுகளை பிறப்பிக்கும் நிலையில் எல்..சி தற்போது உள்ளது. இன்னும் சில தினங்களில் உத்தரவுகள் வழங்கப்படும் என்று நாம் நம்பிக்கையாகவுள்ளோம். .

இப்பிரச்சினையை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நீண்ட காலமாக கையிலெடுத்து வந்துள்ளது. ....ஏ வின் கான்பூர் மாநாட்டு முடிவின்படி புதிய பணி நியமனம் மற்றும் தற்காலிக ஊழியர்கள் பிரச்சினைகளுக்காக நாடெங்கும் தர்ணா,ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் நாடு முழுதும் நடந்துள்ளது. 2009 ல் உதவியாளர்களுக்கான பணி நியமனம்
நடைபெற்ற போது ஏற்கனவே பணி நியமனம் பெற்று காத்திருப்போர் பட்டியலில் இருந்து தற்காலிகமாக பணியாற்றிய நான்காம் பிரிவு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதர நான்காம் பிரிவு ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு ஒரு நியாயமான காலவரையறைக்குள் தீர்வு வரவில்லையென்றால் போராட்ட இயக்கங்கள் நடத்துவது என 2010 ல் டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய மாநாடு முடிவெடுத்தது. தற்காலிக ஊழியர்களுக்கான தீர்மானம் எல்..சி நிர்வாகத்திடம் அளிக்கப்பட்ட போது இம்முடிவும் எல்..சி நிர்வாகத்திடம்
தெரிவிக்கப்பட்டது. இறுதியாக எல்..சி தீர்வை முன்வைத்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் அடங்கிய திட்டமும் வந்தது.

சில மையங்களில் சில அதிகாரிகள் எடுத்த நிலை காரணமாக இத்திட்டத்தில் சில ஊழியர்களால் பலன் பெற முடியவில்லை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதே போல பகுதி நேர ஊழியர்கள் தற்காலிக ஊழியர்கள் அல்லாததால் அவர்களாலும் இத்திட்டத்தால் பயன் பெற முடியவில்லை. இவற்றையெல்லாம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கையிலெடுத்து
உள்ளது. அதே போல மூன்றாம் பிரிவு பணிகளில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளையும் ஏ....ஏ ஏற்கனவே எடுத்துள்ளது. இவைகளுக்க்கெல்லாம் தீர்வு கிடைக்க அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளும்.

நாம் இந்த சாதனையின் சிறப்பையும் மகத்துவத்துவத்தையும் முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுலாக்குகையில் நான்காம் பிரிவுகளை ஒழித்துக் கட்டுவது என முடிவெடுத்தது. வங்கிகள் நான்காம் பிரிவு பணிகளில் ஆளெடுப்பு என்பதையே நிறுத்தி விட்டது. பொது இன்சூரன்ஸ் துறையைப்
பொறுத்தவரை பியூன் மற்றும் பதிவு எழுத்தர் பணிகளை காலாவதியான பணிகள் என்று அறிவித்து விட்டது( முன்னர் அவை ஒழிக்கப்பட்ட பணிகள் என்றே அறிவித்தது). மொத்ததில் நான்காம் பிரிவு பணிகளில் ஆளெடுப்பை நிறுத்துவது என்பது மத்தியரசின் கொள்கையை அமுலாக்குவதாகவே மாறி விட்டது. உச்ச நீதிமன்றமும் சமீப காலங்களில் பல்வேறு வழக்குகளில் தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியராக பணியமர்த்துவதற்கு எதிராகத்தான் அமைந்துள்ளது.

இப்பின்னணியில்தான் நாம் தற்போதைய சாதனையை பார்க்க வேண்டும். நிரந்தர ஊழியர்களை நியமனம் செய்வதை தடுக்கும் மத்தியரசின் புதிய தாராளமயக் கொள்கைக்கு எதிராக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இந்த மிகப் பெரிய சாதனை சிகரமாய் காட்சியளிக்கிறது.

இந்த அளவிற்கு இத்திட்டத்தை வெற்றிகரமாக அமுலாக்க பாடுபட்ட அனைத்து கிளை, கோட்ட , மண்டல அமைப்புக்களுக்கும் தோழர்களுக்கும் பாராட்டுக்களை உரித்தாக்குகிறோம். . எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வில் பங்கேற்ற அனைத்து தற்காலிக ஊழியர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவர்கள் எல்..சி அலுவலகங்களில் எல்..சி ஊழியர் என்ற பெருமையோடு இருப்பார்கள் என்ற உறுதியையும் தெரிவித்துக்கொள்கிறோம். .



No comments: