தமிழகம் முழுதிலிருந்தும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்
தோழர்கள் தங்களின் வர்க்கக் கடமையை நினைவு படுத்தி எழுச்சி கொள்ளும் வெண்மணி தினத்தன்று இவ்வாண்டு சமூக ஒடுக்குமுறை எதிர்ப்பு கருத்தரங்கம் நடத்துவதென தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர்
கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. தென் மண்டலத் தலைவர்
தோழர் எம்.குன்னிகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் திருவாரூரில்
நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு
முன்னணியின் துணைத்தலைவர் தோழர் எ.ஜக்கையன், அகில இந்திய இணைச்செயலாளர் தோழர் ஜே.குருமூர்த்தி, ஆகியோர் உரையாற்ற உள்ளனர். உத்தப்புரம் கிராமமக்களுக்கான போராட்டத்தில் காவல்துறை
அடக்குமுறைக்கு உள்ளான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கப் பொறுப்பாளர் தோழர் எஸ்.கே.பொன்னுத்தாய் கௌரவிக்கப் படவுள்ளார்.

வேலூரில் இருந்தும் விழுப்புரத்திலிருந்தும் இரு வாகனங்கள் வெண்மணி
நோக்கி புறப்படவுள்ளன. 24 .12 .2010 இரவு திருவாரூர் அடைவது என
திட்டமிடப்பட்டுள்ளது.
வெண்மணியில் சங்கமிப்போம், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவோம்
ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் முன்னேறுவோம்
கடந்த ஆண்டு வெண்மணி சங்கமம் புகைப்படங்களில்
வெண்மணி நினைவாலய நிதி வழங்கும் நிகழ்ச்சி மற்றும்
வெண்மணிப் பயணம்
வெண்மணிப் பயணம்
ªõ
2 comments:
dear comrade
i have seen the page. it is really good and congrats for the effort you have taken. it is really nice
Com R,
Thanks for visiting the blog &
offering your feedback.
with Greetings
SR
Post a Comment