Sunday, December 26, 2010

வெண்மணியில் சங்கமித்த இன்சூரன்ஸ் ஊழியர்கள்



நேற்று 25 .12 . 2010  அன்றும் வர்க்கப்போரில் உயிர் நீத்த
வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம்
முழுதும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் வெண்மணியில்
திரண்டனர். அஞ்சலி என்பது வெறும் சடங்கல்ல.
அவர்களின் தியாகத்தை நெஞ்சிலேந்தி மனதில்
உரம் பெற்று போராட்டப் பயணத்தை மேலும்
உறுதியாக தொடர்வதற்காகத்தான். வெண்மணி
மண்ணில்ஒவ்வொரு முறையும் கால்
பதிககிறபோதும் நாம் நம்மை புதுப்பித்துக்
 கொள்கின்றோம் என்பதுதான்
உண்மை.

ராமையாவின் குடிசையில் வைத்த தீ போராட்ட
உணர்வை அழித்துவிடும் என ஆண்டைகள் போட்ட
கணக்கு தவறு என்றும் அந்த தீ ஒவ்வொரு
 உழைப்பாளி  நெஞ்சிலும்  இன்னமும் எரிந்து 
கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு 
ஆண்டு வெண்மணி தினத்தன்றும் 
நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

இவ்வாண்டும் வெண்மணி செல்வதற்கு 
முன்பாக திருவாரூரில்  சமூக ஒடுக்குமுறை
எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. தென் 
மண்டல தலைவர் தோழர் எம்.குன்னிகிருஷ்ணன் 
தலைமையேற்க, அகில இந்திய இணைச்செயலாளர்
தோழர் ஜே.குருமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு 
முன்னணியின் துணைத்தலைவர் தோழர் 
கு.ஜக்கையன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

உத்தப்புரம் பிரச்சினையில் காவல்துறையால் 
தாக்கப்பட்ட மாதர் சங்கப் பொறுப்பாளர் தோழர் 
எஸ்.கே.பொன்னுத்தாய் கௌரவிக்கப்பட்டார். 
எனது எலும்புகளை  உடைத்து விட்டால்  
உத்தப்புரம் போராட்டத்தை முடக்கி விடலாம். 
மற்ற தலைவர்களை தாக்கினால்  அடக்கி விடலாம்
என்று காவல்துறை கருதியது.  அப்படி அடங்கிப் 
போகின்ற அமைப்பு நாமல்ல என்றும் ஒரு 
தோழர் இல்லாவிட்டால் அடுத்த தோழர் 
அப்போராட்டத்தை  முன்னேடுத்துச்செல்வார்  என்று
காவல்துறை அறிந்திருக்கவில்லை  என்று அவர்
கூறிய வார்த்தைகள் இன்னும் ஒலித்துக் கொண்டே 
உள்ளது.

தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர்
கே.சுவாமிநாதனின் அற்புதமான நிறைவுரையோடு 
கருத்தரங்கம் நிறைவு பெற்று வெண்மணி நோக்கிய
பயணம் தொடங்கியது.


தோழர் எம். குன்னிகிருஷ்ணன்

 பங்கேற்றோர்

 தோழர் எஸ்.கே.பொன்னுத்தாய் கௌரவிப்பு

 தோழர் எஸ்.கே.பொன்னுத்தாய்

 தோழர் ஜே.குருமூர்த்தி 

தோழர் கு.ஜக்கையன்  

 தோழர் சுரேஷ் குமார், மதுரை

வெண்மணி இதழிற்கு வேலூர் கோட்டத்திலிருந்து
மேலும் 100  சந்தா  

 தோழர் ஆர்.தர்மலிங்கம்,

 களப்பலியானர்களின் பட்டியல் 
இந்த நினைவுத்தூணிலே 

 கம்பீரமாய் எழுந்து வரும்
வெண்மணி நினைவாலயம்

 தோழர் கே.சுவாமிநாதன்

 என்றென்றும் அதிர்வு தரும்
எழுச்சி தரும்,
வெண்மணி நினைவுச்சின்னம்

No comments:

Blog Archive