எல்.ஐ.சி உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் ஐந்தாவது
தமிழ் மாநில மகளிர் மாநாடு 30 ஜனவரி 2011 அன்று வேலூரில்
நடைபெறவுள்ளது. மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக
வரவேற்புக்குழு ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. 07 டிசம்பர் அன்று நடைபெற வேண்டிய அமைப்புக்கூட்டம் மழை காரணமாக ஒத்தி
வைக்கப்பட்டு தற்போது 28 டிசம்பர் 2010 அன்று வேலூர்
கோட்ட அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் தோழர் ஜி.லதா, தென் மண்டல
இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தோழர்
கே.சுவாமிநாதன், துணைத்தலைவர் தோழர் என்.ஆனந்தசெல்வி,
இணைச்செயலாளர் தோழர் எம்.கிரிஜா, தென் மண்டல எல்.ஐ.சி
உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் இணை அமைப்பாளர்
தோழர் என்.கண்ணம்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
1996 ல் நடைபெற்ற தென் மண்டலக் கூட்டமைப்பின் 24 வது பொது
மாநாட்டிற்குப் பின்பாக வேலூர் கோட்டத்தில் நடைபெறுகின்ற
மாநில அளவிலான பெரிய நிகழ்ச்சி இம்மாநாடுதான். வேலூர்
கோட்டத்தைப் பொறுத்தவரை நமக்கு இரு இலக்குகள் உள்ளது.
மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்துவது, மாநாட்டில் வேலூர் கோட்ட
மகளிர் தோழர்களின் பங்கேற்பை நூறு சதவிகிதம் உறுதிப்படுத்துவது.
இவை இரண்டுமே சாத்தியமான ஒன்றுதான். இந்த இலக்குகளை
நோக்கி முன்னேறுவோம். வெற்றி காண்போம்.
சரோஜ் இல்லம், அருகதம்பூண்டி மேட்டுத் தெரு, வேலூர்- 4 (தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் மூலம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்துடன் இணைக்கப்பட்டது).
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2010
(12)
-
▼
December
(12)
- எல்.ஐ.சி உழைக்கும் மகளிர் ஐந்தாவது தமிழ் மாநில ம...
- அதிகரிக்கும் தற்கொலைகள்
- வெண்மணியில் சங்கமித்த இன்சூரன்ஸ் ஊழியர்கள்
- உடையும் சுவர்கள்
- WORKERS STRIKE AGAIN IN GREECE
- 43RD SESSION OF INDIAN LABOUR CONFERENCE
- வருந்துகிறோம்
- ஐந்தாவது தமிழ் மாநில மகளிர் மாநாடு
- தோழர் பாப்பா உமாநாத் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி
- வெண்மணி சங்கமம் 2010
- எதிர் கால இயக்கங்கள்
- வெண்மணிக்கு வேலூரில் 103 சந்தா
-
▼
December
(12)
No comments:
Post a Comment