Tuesday, December 28, 2010

எல்.ஐ.சி உழைக்கும் மகளிர் ஐந்தாவது தமிழ் மாநில மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்பு

30 ஜனவரி 2011  அன்று வேலூரில் நடைபெறவுள்ள எல்.ஐ.சி  உழைக்கும்  மகளிர் ஐந்தாவது தமிழ் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான வரவேற்புக்குழு   இன்று அமைக்கப்பட்டது.

வேலூர் கோட்டத் துணைப் பொருளாளர் தோழர் எம்.ஏ மங்கள கௌரிசெல்வி தலைமை  ஏற்க துணைக்குழு இணை அமைப்பாளர் தோழர் பரமேஸ்வரி வரவேற்புரை வழங்கினார்.  மாநாட்டின் நோக்கம் குறித்து தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் என்.ஆனந்தசெல்வி விளக்கினார். வேலூர் கோட்டப் பொதுச்செயலாளர் தோழர் எஸ்.ராமன், வரவேற்புக்குழுவை முன்மொழிந்து  பேசினார்.  சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலச்செயலாளர் தோழர் ஆண்டாள், அனைத்திந்திய   ஜனநாயக மாதர் சங்க மாவட்டத்தலைவர் தோழர் வளர்மதி
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன் இறுதியாக
சிறப்புரையாற்றினார். காட்பாடி கிளைச்செயலாளர் தோழர் எஸ்.பானுமதி
நன்றி தெரிவிக்க கூட்டம் இனிதே முடிந்தது.  கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய   குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் தோழர் ஜி.லதா அவர்கள், அவசரப் பணி காரணமாக வாணியம்பாடி செல்ல வேண்டியிருந்ததால் அவரால் வர இயலவில்லை. மாநாட்டு வெற்றிக்கு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும்  செய்வதாக உறுதியளித்துள்ளார்.

தோழர் ஜி.லதா அவர்களை தலைவராகவும். தோழர் பிளாரன்ஸ் லிடியா அவர்களை செயலாளராகவும் தோழர் எம்.ஏ மங்கள கௌரிசெல்வி அவர்களை பொருளாளராகவும்  கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.

அகில இந்தியத் தலைவர் தோழர் அமானுல்லாகான் அல்லது பொதுச்செயலாளர்  தோழர் கே.வேணுகோபால் இந்த  இருவரில் ஒருவர் மாநாட்டில்  பங்கேற்பார் என தோழர் சுவாமிநாதன் தகவல்  தெரிவித்துள்ளார்.  மாநாட்டை சிறப்பாக நடத்துவது,  வேலூர் கோட்ட பங்கேற்பை 100 %   உறுதிப்படுத்துவது  என்ற  இலக்கோடு செயல்படுவோம்.  வெற்றி காண்போம்.















No comments:

Blog Archive