கோவையில் தீண்டாமைப் ”பெருஞ்”சுவர் அகற்றம் !
கோவை அருகே நாகராஜபுரத்தில் கட்டப்பட்டிருந்த தீண்டாமைச்சுவர், தீண்டாமை ஒழிப்புமுன்னணியின் வலியுறுத்தலைத் தொடர்ந்து இடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கோவை அருகே உள்ள வேடபட்டி பேரூராட்சி பகுதியின் நாகராஜபுரம் தலித் குடியிருப்புகளை மறைத்து சாதீய ஆதிக்க வன்மத்துடன் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் தீண்டாமைச் சுவரை எழுப்பியிருந்தனர். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டிருந்த இந்தத் தீண்டாமைச் சுவரை அகற்றி தலித் மக்கள் சென்று வர பாதை ஏற்படுத்தி தரவேண்டுமென தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியிருந்த கோரிக்கையை வலியுறுத்தி அடுத்தடுத்த போராட்டங்களுக்கும் அமைப்பின் சார்பில் திட்டமிடப்பட்டது. இதனிடையே தீண்டாமைச் சவரை ஆய்வு செய்த கோவை மாவட்ட அதிகாரிகளும் வீரிகேரளம் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளும் சனிக்கிழமையன்று தீண்டாமைச் சுவரை இடித்து அகற்றியுள்ளனர். அரசு அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையை மகிழ்ச்சியுடன் வரவேற்று பாராட்டுகிறோம். இப்பணியில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. உரிய முறையில் இப்பிரச்சினையில் தலையிட்டு தலித் மக்களின் உரிமையை நிலை நாட்டிய மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட நிர்வாகிகள் முன்னணி ஊழியர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக இடிக்க வேண்டும் !
இதுகுறித்து கிராம மக்களிடம் பேசியபோது அவர்கள், “பல ஆண்டுகளாக பயனபடுத்திவந்த பாதையை அந்தச் சுவர் தடுத்துவிட்டது. இருப்பினும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் முயற்சியில் பாதை கிடைத்துள்ளது. அரசு அதிகாரிகள் இரண்டு இடங்களில் சுவர்களை இடித்துள்ளனர். இது ஆரம்பமாக இருக்கட்டும். சமூக அவலத்தின் அடையாளமான முழுச் சுவரையும் இடித்து தரைமட்டமாக்க வேண்டும்.” என்றனர்.
நன்றி மாற்று.காம்
இடிக்கப்பட்டது இந்த சுவர்தான்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு
வேலூர் கோட்டசங்கத்தின்
பாராட்டுக்கள்
No comments:
Post a Comment